Breaking News

சகல தரப்­பி­ன­ரு­ட­னான ஆலோ­ச­னை­யு­ட­னேயே உள்­ளக பொறி­மு­றையை தயா­ரிக்­க­வுள்ளோம் - விஜே­தாச

அனைத்துத் தரப்­பி­ன­ரு­டனான ஆலோ­ச­னை­களின் பின்னர் உண்­மையைக் கண்­ட­றி­வ­தற்கும் நீதியை நிலை­நாட்­டு­வ­தற்கும் நல்­லி­ணக்­கத்தை நோக்கி பய­ணிப்­ப­தற் கும் பொறி­மு­றை­யொன்றை தயா­ரிக்க இருக்­கின்றோம். 

இந்த பொறி­மு­றையில் உண்மையைக் கண்­ட­றியும் ஆணைக்­குழு, காணாமல்போனோர் தொடர்பில் ஆராயும் அலு­வ­லகம், நீதி­மன்றப் பொறி­முறை, இழப்­பீடு வழங்கும் பொறி­முறை என்­பவை நிறு­வப்­ப­ட­வுள்­ளன நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாச ராஜ­பக்ஷ தெரி­வித்தார்.

யுத்­தத்தால் சேத­ம­டைந்த நாட்டை மீண்டும் கட்­டி­யெ­ழுப்­பு­வ­துடன் பாதிக்­கப்­பட்ட மக்­களின் மனங்­களை வெற்­றி­கொள்­வதும் எமது நோக்­க­மாகும் என்றும் அவர் குறிப்­பிட்டார். மெக்­ஸி­கோவில் நேற்று முன்­தினம் நடை­பெற்ற திறந்த அர­சாங்க பங்­கு­டமை என்ற சர்­வ­தேச மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அமைச்சர் அங்கு மேலும் உரை­யாற்­று­கையில் :

இந்த வரு­டத்தில் இரண்டு வெற்­றி­க­ர­மான தேர்­தல்­களில் இலங்கை மக்கள் மிகவும் அமை­தி­யான முறையில் மாற்­ற­மொன்­றுக்­காக வாக்­க­ளித்­தி­ருந்­தனர். குறிப்­பாக கிட்­டத்­தட்ட 10 வரு­டங்­க­ளாக நாட்டில் காணப்­பட்ட ஏகா­தி­பத்­தி­ய­வாத்­திற்கு மக்கள் முடிவு கட்­டினர். கடந்த அர­சாங்­கத்தின் வெளிப்­படைத் தன்மை இன்மை பொறுப்­புக்­கூறல் இன்மை என்­ப­வையே மக்­களின் இந்த மாற்றக் கோரிக்­கைக்கு வழி வகுத்­தது. அது­மட்­டு­மன்றி மிகவும் அமை­தி­யான முறையில் இந்த மாற்­றத்தை மக்கள் மேற்­கொண்­டி­ருந்­தனர்.

நாட்டின் தலை­வி­தியை தீர்­மா­னிப்­பதில் மக்­களின் பங்­க­ளிப்பு என்­பது மிகவும் அவ­சியம் என்­பதை மக்கள் நிரூ­பித்­துள்­ளனர். இலங்கை அர­சாங்­கமும் மக்­களும் திறந்த அர­சாங்க திட்­டமில் செயற்­பாட்டில் பங்­கெ­டுப்­ப­தற்கு தயா­ரா­கி­யுள்­ளனர். இது எமது அர­சாங்­கத்தின் நோக்­க­மா­கவும் காணப்­ப­டு­கி­றது. அர­சி­ய­ல­மைப்பின் 19 ஆவது திருத்த சட்­டத்தின் ஊடாக தக­வ­ல­றியும் உரி­மையை நாங்கள் அடிப்­படை உரி­மை­யாக மாற்­றி­யி­ருக்­கிறோம். 19 ஆவது திருத்த சட்­டத்தின் ஊடாக நிறை­வேற்று அதி­கா­ரத்தை வலு­வி­ழக்கச் செய்­த­துடன் பாரா­ளு­மன்­றத்­திற்கு அதி­கா­ரங்­களை வழங்­கி­யுள்­ளது.

வெகு விரைவில் தக­வ­ல­றியும் சட்­ட­மூ­லத்தை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்து நிறை­வேற்­று­வ­தற்கு எதிர்­பார்க்­கின்றோம். ஊழ­லுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுப்­பதும் சட்­டத்தின் ஆட்­சிப்­ப­டுத்­தலை பலப்­ப­டுத்­து­வதும் அர­சாங்­கத்தின் முதன்மை நிகழ்ச்சித் திட்­ட­மாகும்.

கடந்த சில வரு­டங்­களில் இடம் பெற்ற ஊழல்கள் தொடர்பில் ஆராய்­வ­தற்கு ஊழல் எதிர்ப்பு செயற்­பா­டு­களை பலப்­ப­டுத்­தி­யுள்ளோம். குறிப்­பாக பாரிய ஊழல்கள் குறித்து விசா­ரிப்­ப­தற்கு ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவொன்றையும் நிய­மித்­தி­ருக்­கின்றோம். அது­மட்­டு­மன்றி 19 ஆவது திருத்த சட்­டத்தின் ஊடாக அர­சி­ய­ல­மைப்பு பேரவை நிறு­வப்­பட்­டுள்­ளது. இதில் மூன்று சிவில் சமூக பிர­தி­நி­தி­களும் இடம் பெறு­கின்­றனர். இந்த அர­சி­ய­ல­மைப்புப் பேர­வை­யா­னது சுயா­தீன ஆணைக்­கு­ழுக்­களை நிய­மிக்க நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது.

30 வருட யுத்­தத்தை கடந்­துள்ள இலங்­கை­யா­னது நாட்டை மறு­சீ­ர­மைப்­ப­தற்கும் நல்­லி­ணக்­கத்­தையும் அபி­வி­ருத்­தி­யையும் முன்­னெ­டுப்­ப­தற்கும் வேலைத்­திட்­டங்­களை மேற்­கொண்டு வரு­கி­றது. யுத்­தத்தால் சேத­ம­டைந்த நாட்டை மீண்டும் கட்­டி­யெ­ழுப்­பு­வ­துடன் பாதிக்­கப்­பட்ட மக்­களின் மனங்­களை வெற்­றி­கொள்­வதும் எமது நோக்­க­மாகும். அதற்­காக ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் இலங்கை அர­சாங்கம் அண்­மையில் விளக்­க­ம­ளித்­ததைப் போன்று அனைத்துத் தரப்­பி­ன­ரு­டான ஆலோ­ச­னை­களின் பின்னர் உண்­மையைக் கண்­ட­றி­வ­தற்கும் நீதியை நிலை­நாட்­டு­வ­தற்கும் நல்­லி­ணக்­கத்தை நோக்கி பய­ணிப்­ப­தற்கும் பொறி­மு­றை­யொன்றை தயா­ரிக்க இருக்­கின்றோம். இந்த பொறி­மு­றையில் உண்­மையைக் கண்­ட­றியும் ஆணைக்­குழு காணாமல் போனோர் தொடர்பில் ஆராயும் அலு­வ­லகம், நீதி­மன்றப் பொறி­முறை, இழப்­பீடு வழங்கும் பொறி­முறை என்­பவை நிறு­வப்­ப­ட­வுள்­ளன. 

இந்தப் பொறி­மு­றையை அர­சாங்கம் வெளிப்­படைத் தன்மை, பொறுப்­புக்­கூறல், மற்றும் சிவில் சமூக பங்­க­ளிப்­பு­ட­னேய முன்­னெ­டுப்­ப­தற்கு ியை நிலை­நாட்­டு­வ­தற்கும் நல்லிணக்கத்தை நோக்கி பயணிப்பதற்கும் பொறிமுறையொன்றை தயாரிக்க இருக்கின்றோம். இந்த பொறிமுறையில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு காணாமல் போனோர் தொடர்பில் ஆராயும் அலுவலகம், நீதிமன்றப் பொறிமுறை, இழப்பீடு வழங்கும் பொறிமுறை என்பவை நிறுவப்படவுள்ளன. இந்தப் பொறிமுறையை அரசாங்கம் வெளிப்படைத் தன்மை, பொறுப்புக்கூறல், மற்றும் சிவில் சமூக பங்களிப்புடனேய முன்னெடுப்பதற்கு திட்டமிட்டிருக்கின்றோம்.