தமிழினி அவர்களின் இழப்பு தமிழ்த் தேசத்திற்கு ஈடுசெய்யப்பட முடியாத பேரிழப்பு - த.தே.ம.முன்னணி
தமிழ் மக்களது அரசியல் விடுதலைக்கான பயணத்தில் தனது 19வது வயதில் தன்னை இணைத்துக் கொண்ட சிவகாமி என்ற சொந்தப் பெயரைக் கொண்ட தமிழினி அவர்கள் விடுதலைப் போராட்டத்தின் இறுதிக்கணம் வரை மக்களின் அரசியல் விடுதலைக்காகவும் பெண்கள் சிறுவர்களது பாதுகாப்பு, முன்னேற்றத்திற்காகவும் உழைத்தார்.
சிறந்த பண்பும், ஆளுமையும் கொண்ட தமிழினி அவர்கள் தமிழ் பெண்களின் தலைநிமிர்வுக்காக மட்டுமல்ல ஒட்டுமொத்த பெண்களதும் உயர்வுக்காக அற்பணிப்புடன் உழைத்தார்.
யுத்த முடிவில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு கொடுமையான விசாரணைக்ளுக்கு முகம் கொடுத்து, சிறைவாழ்வு மற்றும் புனர்வாழ்வுக்கு உள்ளாக்கப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.; கொடிய புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு 17-10-2015 அன்று எம்மை விட்டுப் பிரிந்துள்ளார்.
தமிழினி அவர்களது இழப்பு தமிழ்த் தேசத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். எமது மண்ணையும் மக்களையும் ஆழமாக நேசித்து எம்மை விட்டுப் பிரிந்துள்ள வீரப்புதல்வியின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதுடன், அவரது பிரிவுக்காக அனைத்து தமிழ் மக்களையும் ஒரு கணம் தலைசாய்க்குமாறு வேண்டுகின்றோம். மேலும் அவரது இறுதி வணக்க நிகழ்வுகளிலும் பங்கெடுத்து அவர் தாய் மண்ணுக்கு தனது இளமைக்காலத்தை அற்பணித்து ஆற்றிய பணிக்கு கௌரமளிக்குமாறும் அழைப்பு விடுக்கின்றோம்.
நன்றி
செல்வராசா கஜேந்திரன்
பொதுச் செயலாளர்








