Breaking News

எக்னலிகொட வழக்கின் பிரதிவாதிகளாக இராணுவத் தளபதி, புலனாய்வுப் பிரிவு பிரதானி

காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில், பிரதிவாதிகளாக இராணுவத் தளபதி மற்றும் இராணுவ புலனாய்வுப் பிரிவின் பிரதானி ஆகியோரை பெயரிட மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சந்யா எக்னலிகொடவினால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனுவில் பிரதிவாதிகளை இம்மாதம் 30ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்றம் இதன்போது உத்தரவிட்டுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். 

மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி விடுத்த கோரிக்கைகளை ஆராய்ந்த நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.