விமலுடன் கூட்டு சேரும் சோமவன்ச
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஜே.வி.பி.யின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்கவும், முன்னாள் ஜே.வி.பி.யின் பிரச்சார செயலாளர் விமல் வீரவன்சவும் கூட்டணி சேரவுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பத்து அரசியல் கட்சிகள் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
மேலும், சோமவன்ச அமரசிங்கவின் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கூட்டாக இணைந்த தேர்தலில் போட்டியிட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். தனியான கூட்டணி ஒன்றை அமைத்து தேர்தலில் போட்டியிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கட்சிகள் இதற்கு இணங்கியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.