அவன்காட் நிறுவனத்தை ரத்து செய்வதில் சிக்கல் – கெஹெலிய
அவன்காட் நிறுவனம் மற்றும் அரசாங்கம் இடையிலான ஒப்பந்தத்தை இரத்து செய்ய மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தில் சட்டச் சிக்கல் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இந்த தீர்மானம் தொடர்பில் அவரிடம் வினவிய சந்தர்ப்பத்திலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவன்கார்ட் நிறுவனம் மற்றும் அரசாங்கத்திற்கு இடையிலான ஒப்பந்தத்தை இரத்து செய்வது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் குறித்து சிங்கள ஊடகமொன்று பிரதான அரசியல் கட்சிகளிடம் வினவியுள்ளது.
அவன்கார்ட் சம்பவம் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளும் அதிகாரம், அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சிக்காக கருத்து வெளியிட்ட அமைச்சர் ஹரின் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட இத் தீர்மானம் மிகவும் சிறப்பானதென மக்கள் விடுதலை முன்னணிக்காக கருத்து வெளியிட்ட அக் கட்சியின் பிரதான செயலாளர் டில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.