Breaking News

சுமந்திரன் – விக்னேஸ்வரன் விடயம் விளக்கம் கோரப்படும்-மாவை

வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன்
மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் ஆகியோரிற்கிடையில் எவ்விதமான பிரச்சனைகளும் இல்லை என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

சுமந்திரன் மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோரிற்கிடையிலான பிரச்சனை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்துள்ள அவர், இருவரிற்கு இடையிலான பிரச்சனைகளை ஊடகங்களே திரிபுபடுத்தி வெளியிடுவதாகவும் தெரிவித்துள்ள அவர் தமிழரசு கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகளே இவ்வாறான கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சுமந்திரன் நாடு திரும்பியதும் அவரிடம் விளக்கம் கோரப்படும் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை த.தே.கூட்டமைப்பின் பிரதான புலம்பெயர் தளமான கனடா கிளை விக்கினெஸ்வரனை நீக்கும் தகுதி சுமந்திரனை தவிர வேறு யாருக்கு உண்டு என்று கேள்விஎழுப்புகின்றது.