Breaking News

ஜன­வ­ரியில் அர­சாங்­கத்தை கவிழ்ப்போம் - மஹிந்த அணி சூளுரை

சர்­வ­தேச விசா­ர­ணைக்கு இணக்­கப்­பாடு தெரி­விக்கும் அமெ­ரிக்­காவின் உடன்­ப­டிக்­கைக்கு இலங்கை அர­சாங்கம் கையெ­ழுத்­திட்டு எமது நாட்­டையும் படை­யி­ன­ரையும் காட்­டிக்­கொ­டுத்­துள்­ளது எனக் குற்­றம்­சாட்டும் மஹிந்த அணி சார்பு கூட்டு எதிர் கட்­சி­யி­னர்“­பொ­றுத்­தது போதும்” எதிர்­வரும் ஜன­வ­ரியில் அர­சாங்­கத்தைக் கவிழ்க்கும் எமது மக்கள் போராட்­டத்தை ஆரம்­பிப்போம் என்றும் சப­த­மிட்­டனர்.

கொழும்பு பொர­ளை­யி­லுள்ள என்.எம்.பெரேரா நிலை­யத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற “மஹிந்த அணி சார்பு கூட்டு எதிர்க்­கட்­சியின் ஊட­க­வி­ய­லாளர் மாநாட்­டி­லேயே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டது.

இங்கு உரை­யாற்­றிய முன்னாள் அமைச்­சரும், எம்.பி.யுமான தினேஷ் குண­வர்த்­தன.

இலங்­கைக்கு எதி­ரான ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் ஆணை­யாளர் நாய­கத்தின் அறிக்­கையை ஏற்­றுக்­கொண்ட அரசு அமெ­ரிக்­காவின் இலங்கை தொடர்­பான பிரே­ர­ணையை தாமே முன்­வைத்­து­ஏற்றுக்­கொண்­டது.அதே­வேளை சர்­வ­தேச நீதி­ப­தி­களின் பிர­சன்­னத்தில் இலங்கை தொடர்­பாக விசா­ரிப்­ப­தற்­கான சர்­வ­தேச நீதி­மன்­றத்­தையும் அரசு ஏற்றுக் கொண்­டுள்­ளது.

அது தொடர்பில் அமெ­ரிக்கா தயா­ரித்­துள்ள இணக்­கப்­பாட்டு உடன்­ப­டிக்­கையில் வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர கையெ­ழுத்­திட்­டுள்ளார். இதன் மூலம் பயங்­க­ர­வா­தத்தை ஒழித்த எமது படை­யி­னரும் நாடும் சர்­வ­தே­சத்­திற்கு காட்டிக் கொடுக்­கப்­பட்­டுள்­ளது.

எமது படை­யினர் பெற்ற வெற்றி பின்­னோக்கி நகர்த்­தப்­பட்­டுள்­ளது. இன்று அரசின் இந்தக் காட்டிக் கொடுப்பு தொடர்­பாக அர­சுக்கு ஆத­ரவு வழங்கும் ஸ்ரீலங்கா சுந்­திரக் கட்­சி­யி­ன­ரி­டையே எதிர்ப்பு தலை­தூக்­கி­யுள்­ளது.

அமைச்சர் நிமல் சிறி­பால டி சில்வா நல்­லாட்­சிக்கு எதி­ராக போர்க்­கொடி தூக்க ஆரம்­பித்து விட்டார். நாட்டின் அர­சி­ய­ல­மைப்­பையும் சட்­டத்­து­றை­யையும் மீறி ஜெனிவா பிரே­ர­ணைக்­க­மைய சர்­வ­தேச விசா­ரணை நடை­பெ­ற­வுள்­ளது.

இன்று அர­சுக்கு ஆத­ரவு வழங்கும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு நாட்டின் சட்­டத்தை தனது கையில் எடுத்து நீதித்­து­றைக்கு சவால் விடுக்­கின்­றது. சட்­டத்தை மீறி விடு­தலைப் புலி உறுப்­பி­னர்­களை விடு­தலை செய்­யு­மாறு வலி­யு­றுத்தி ஹர்த்தால் நடத்து­கின்­றது.

நாட்டில் சட்டம், நீதித்­துறை அனைத்தும் சீர் குலைந்து சின்­னா­பின்­ன­மா­கி­யுள்­ளன. எனவே இன்று நாட்­டுக்குள் பயங்­க­ர­மான தேசிய பாது­காப்­பிற்கு அச்­சு­றுத்­த­லான நிலை தலை­தூக்­கி­யுள்­ளது என்றார்.

தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலைவர் விமல் வீர­வங்ச எம்.பி. குறிப்­பி­டு­கையில்

நாட்டை காட்­டிக்­கொ­டுக்கும், படை­யி­னரை பழி­வாங்கும் அரசின் நட­வ­டிக்­கை­களை பார்த்துக் கொண்டு தொடர்ந்தும் மௌன­மாக இருக்க முடி­யாது. எனவே அரசைக் கவிழ்க்கும் எமது போராட்­டத்தை ஜன­வ­ரியில் ஆரம்­பிப்போம்.இது “ஹைபிறிட்” அர­சாங்கம் பசு­மாட்­டையும் காளை மாட்­டையும் இணைத்து விவ­சாய நிலத்தை உழு­வது போன்று இன்று அரசு நிலை தடு­மாறி செயற்­ப­டு­கி­றது.

அர­சாங்­கத்தில் அமைச்­சர்கள் இரண்டு பிரி­வு­க­ளாகப் பிரிந்து ஒரு­வ­ருக்­கொ­ருவர் ஊழல் மோசடிக் குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்து குடும்­பிப்­பிடிச் சண்டை நடத்­து­கின்­றனர். 10 வரு­டங்கள் கழிந்த அர­சுக்குள் தான் இவ்­வா­றான முரண்­பா­டுகள் தலை­தூக்கும். ஆனால் இந்த அரசு ஆட்சிக்கு வந்து 10 மாதங்களுக்குள் குடும்பிப்பிடிச் சண்டை ஏற்பட ஆரம்பித்துள்ளது.

எனவே இந்த அரசின் ஆயுட் காலம் வர வர குறைந்து கொண்டே செல்கிறது என்றார். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் எம்.பி க்களான உதய கம்மன் பில மற்றும் பேராசிரியர் திஸ்ஸ விதாரண ஆகியோரும் கலந்து கொண்டனர்.