Breaking News

கைதிகள் விடயத்தில் காத்திரமான நடவடிக்கை வேண்டும் : ஆனந்தன்

தமிழ் அர­சியல் கைதிகள் விட­யத்தில் காத்­தி­ர­மான நட­வ­டிக்கை இல்­லையேல் அர­சு­ட­னான உறவு மீள்­ப­ரி­சீ­லனை செய்­யப்­ப­டு­மென வன்னி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­சக்தி ஆனந்தன் தெரி­வித்தார்.

வவு­னியா வர்த்­தக சங்­கத்தின் ஏற்­பாட்டில் நக­ர­சபை கலா­சார மண்­ட­பத்தில் நேற்று முன்­தினம் திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற வன்­னி­மா­வட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கான வர­வேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.. அவர் தொடர்ந்து கருத்துத் தெரி­விக்­கையில்,

“வட­மா­கா­ணத்தின் மையம் என்று சொல்லக் கூடிய வவு­னியா மாவட்­டத்­திற்கு மூன்று இலட்சம் மக்கள் இடம்­பெ­யர்ந்து வந்­த­போதும், 30 வருட யுத்தத்தால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான உதவி என்று கேட்ட போதும், ஜன­நாயக ரீதி­யாக நடந்த தேர்தல் காலங்­க­ளிலும், உரி­மைக்­கான போராட்ட காலங்­க­ளிலும் வவு­னியா வர்த்­தக சங்கம் செய்த உத­வி­களை மறந்­து­விட முடி­யாது.

ஆட்சி மாற்­றத்தின் பிற்­பாடு இந்த நாட்டில் நிரந்­த­ர­மான சமா­தானம் மற்றும் அபி­வி­ருத்தி நோக்கிச் செல்­வ­தற்கு உங்­க­ளு­டைய ஒத்­து­ழைப்பு தேவைப்­ப­டு­கின்­றது. இந்த ஆண்­டிலே ஜனா­தி­பதி தேர்தல், பாரா­ளு­ மன்றத் தேர்தல் என இரு தேர்­தல் கள் நடை­பெற்­றுள்­ளன.

இந்த தேர்தல் இந்த நாட்­டிலே ஒரு அர­சியல் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. ஆனால் போரால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு இந்த ஆட்­சி­மாற்றம் எவ்­வித தீர்­வையும் பெற்றுக் கொடுக்­க­வில்லை. அதற்­காக நாம் இன்னும் பல மைல்கள் பய­ணிக்க வேண்­டி­யுள்­ளது. அதற்கு உங்­க­ளு­டைய ஒத்­து­ழைப்பு எமக்கு வேண்டும். நீங்கள் எமக்கு வழங்­கி­யி­ருக்கும் பணி மிகவும் கடி­ன­மான கஷ்­ட­மான பணி. எமது மக்­களின் விடி­வுக்­காக நாம் இன்னும் பல தடை­களை தாண்டி செல்­ல­வேண்­டி­யுள்­ளது.

குறிப்­பாக மாறி மாறி ஆட்­சிக்கு வந்த ஆட்­சி­யா­ளர்­களால் ஏமாற்­றப்­பட்ட அர­சியல் கைதி­களின் பிரச்­சினை இருக்­கின்­றது. அதே­நேரம் ஜனா­தி­பதி கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்பந்­தனுக்கு ஒரு வாக்­கு­று­தியை வழங்­கி­யி­ருக்­கின் றார். இந்த வாக்­கு­றுதி நிறை­வேற்­றப்­ப­டுமா இல்­லையா என்­பது எதிர்­வரும் 7 ஆம் திகதி தான் தெரியும். இந்த வாக்­கு­றுதி நிறை­வேற்­றப்­ப­டாத பட்­சத்தில் ஒரு பார­தூ­ர­மான, இந்த நாட்டின் அர­சி­யலை பாதிக்­கின்ற விளைவு ஏற்­படும் என நினை க்­கின்றேன்.

அது­மட்­டு­ம ல்ல, தமிழ் தேசி யக் கூட்­ட­மைப்பு கூட இந்த அர­சி யல் கைதிகள் விட­யத்தில் இந்த அர­சாங்கம் காத்­தி­ ர­மான நட­வ­டிக்­கையை எடுக்­காத பட்­சத்தில் அர­சு­டனான பேச்­சுக்கள், உற­வுகள் தொடர்பில் மீள்­ப­ரி­சீ­லனை செய்ய வேண்­டிய சூழ்­நிலை உரு­வாகும். ஏனென்றால் கடந்த 10 வரு­ட­கா­ல­மாக இந்த நாட்­டிலே மாற்ற முடி­யாது என்று இருந்த ஒரு இருண்ட யுகத்தை தமிழ், முஸ்லிம் மக்கள் தான் மாற்­றி­ய­மைத்­த­வர்கள்.

இந்த ஜனா­தி­ப­தியும், பிர­த­மரும் தெற்கில் இருக்­கின்ற இன­வா­தி­க­ளுக்கும், சல­ச­லப்­பு­க­ளுக்கும் பயந்து அர­சியல் கைதிகள் விட­யத்தில் செயற்­ப­டா­விட்டால் அது பாரிய பாதிப்பை ஏற்­ப­டுத்தும். உள்­நாட்டில் மட்­டு­மன்றி சர்­வதே சரீ­தி­யிலும் அரசுக்கு அழுத்தங்கள் ஏற்படும். எனவே, இந்த மாற்றத்தை ஏற்படுத்திய தமிழ், முஸ்லிம் மக்கள் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டிய பாரிய பொறுப்பு ஜனாதிபதிக்கும், பிரத மருக்கும் இருக்கிறது. இதன் மூலமே வடக்கும், தெற்கும் ஒன்று பட்டு ஒற்றுமையாக வாழக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்க முடி யும் எனவும் தெரிவித்தார்.