கூட்டமைப்பு எதுவுமே செய்யவில்லை:அரசியல் கைதிகள்
அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில்,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் எந்தவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என தற்போது விடுதலையாகியுள்ள அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர்.
நல்லாட்சி முறையை அமைத்திருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் கருணையும் கரிசனையுமே தம்முடைய விடுதலைக்கு காரணம் எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும், தமது போராட்டத்தினாலும் விடுதலையாகியிருப்பதாக கைதிகள் தெரிவித்துள்ளனர்.








