தபால் ஊழியர்கள் நள்ளிரவு முதல் சுகயீனப் போராட்டம்
தபால் சேவையைப் பாதுகாக்கும் நோக்கில் 14 கோரிக்கைகளை முன்வைத்து நேற்று (12) நள்ளிரவு முதல் தபால் ஊழியர்கள் சுகயீனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழில் சங்கங்களின் அமைப்பு அறிவித்துள்ளது.
இன்று (13) காலை 10.00 மணியளவில் தபால் தலைமையகத்தின் முன்னால் சுமார் 1000 ஊழியர்கள் கலந்துகொள்ளும் சத்தியாக்கிரகப் போராட்டமும் இடம்பெறவுள்ளதாக அவ்வமைப்பின் ஏற்பாட்டாளர் ஷிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, ஜனாதிபதி செயலகம் வரையில் ஊர்வலமாக சென்று ஜனாதிபதியிடம் மகஜர் ஒன்றைச் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.