Breaking News

மாணவர் சிந்­திய ஒவ்­வொரு இரத்­தத்­து­ளி­க்கும் அர­சாங்கம் பதி­ல­ளித்­தே­யாக வேண்டும் - கம்­மன்­பில

தற்­போ­தைய அர­சாங்கம் பொலிஸ் சுயா­தீன ஆணைக்­கு­ழுவை நிறு­வி­யதன் பலனை தற்­போது பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் அனு­­ப­விக்­கின்­றனர். அதனால் வோர்ட் பிளேஸ் இல் மாண­வர்கள் சிந்­திய ஒவ்­வொரு இரத்தத் துளிக்கும் அர­சாங்கம் பதி­ல­ளிக்க வேண்டும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் உதய கம்­மன்­பில தெரி­வித்தார்.

கொழும்பு கோட்­டேயில் அமைந்­துள்ள தூய்­மை­யான ஹெல உறு­மய அமைப்பின் அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பின்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

கடந்த அர­சாங்­கத்தின் போதும் பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் பலர் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர். அப்­போதும் பொலிஸார் அவர்­களை நீர்த்­தா­ரைப்­பி­ர­யோகம் மேற்­கொள்ளல் அல்­லது கண்ணீர் புகை மூலம் அவர்­களை கலைத்­தி­ருக்­கின்­றனர். ஆனால் மாண­வர்­களை மிலேச்­சத்­த­ன­மாக தாக்­க­வில்லை.

தற்­போது அதற்கு மாறாக மாண­வர்கள் மிலேச்­சத்­த­ன­மாக தாக்­கப்­ப­டு­கின்­றனர். ஆர்ப்­பாட்­டத்தில் பங்­கேற்­காது வீதியில் சென்­று­கொண்­டி­ருந்த மாணவி ஒரு­வரும் பொலி­ஸாரால் தாக்­கப்­பட்­டுள்ளார்.

குறைந்த பட்ச பலப்­பி­ர­யோகம் என்ற பேரில் பொலிஸார் தாக்­கு­வ­தையும் முறை­யற்ற விதத்தில் கண்­ணீர்ப் புகைக் குண்­டு ­களை பிர­யோ­கிப்­ப­தையும் ஊட­கங்கள் வாயி­லாக அறிந்­து­கொள்ள முடிந்­ தது.

ஆனால் அண்­மையில் பொலிஸ் அத்­தி­யட்­சகர் அலு­வ­ல­கத் தில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் உரை­யாற்­றிய பொலிஸ் ஊட­கப்­பேச்­சா­ளரும் சட்­டத்­த­ர­ணி­யு­மான ருவன் குண­சே­கர, ஒரு நபர் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­படும் போது அவரின் உட லில் குறிப்­பிட்ட இடங்­களில் மட்டும் தான் தாக்­குதல் நடத்த முடியும் என்ற வரை­ய­றைகள் விடுக்­கப்­ப­ட­வில்லை.

பொலிஸார் குறைந்த பட்ச பலப்­பி­ர­யோ­கத்­தினை பயன்­ப­டுத்தி மாண­வர்­களை தாக்­கினர் என்று குறிப்­பிட்­டுள்ளார். ஆனால் ஆர்ப்­பாட்­டத்தை கலைத்த பொலிஸார் மாண­வி­களின் தலையில் தாக்கி காயத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்த படங்கள் வெளி யா­கி­யிருந்­தன.

இது அர­சாங்கம் அமைத்த சுயா­தீன ஆணைக்­கு­ழுவின் பலன். அதனை பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் அனு­ப­விக்க நேரிட்­டுள்­ளது. கடந்த காலங்­களில் அர­ சியல் கைதிகள் விடு­தலை செய்­யப்­பட வேண்டும் என்று வடக்கில் மக்கள் ஆர்ப்­பாட்டம் செய்­தனர். மறு­புறம் மீரி­ய­பெத்தை தோட்ட தொழி­லா­ளர்கள் தமக்கு வீடு வழங்க வேண்டும் எனக் கோரி பெரும் ஆர்ப்­பாட்­டங்கள் செய்த போதும் பொலிஸார் அமை­தி­யான முறையில் அந்த ஆர்ப்­பாட்­டங்­களை கலைத்­தனர்.

ஆனால் நியா­ய­மான கோரிக்­கை­களை முன்­வைத்து உயர் தேசிய கணக்­கீட்டு டிப்­ளோமா பாட­நெறி பயிலும் மாண­வர்கள் ஆர்ப்­பாட்டம் செய்­த­போது அவர்­களை மாண­வர்கள் மிலேச்­ச­த் த­ன­மாக தாக்­கி­யது நியா­ய­மற்­றது.

இவை அனைத்தும் பொலிஸ் சுயா­தீன ஆணைக்­குழு நிறு­வப்­பட்­டதன் விளை­வு­ கள். இதனால் கடந்த காலங்­களில் ஐக்­கிய தேசியக் கட்சி அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்தால் இவ்­வா­றான நிலை­மைகள் ஏற்­படும் என்று எதிர்வு கூறினோம்.

நல்­லாட்சி என்ற பேரில் நாட்டில் எம னின் ஆட்­சியே இடம் பெறு­கின்­றது. தற் ­போதும் அரசு தனது சிறு உரு­வத்தை மட்­டுமே வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது. அதனால் எதிர்­கா­லத்தில் அரசின் சுய­ரூபம் விரை யில் வெளிப்­படும். அதன்­போது இந்த அர­சுக்கு வாக்­க­ளித்த 52 சத­வீ­தத்­தி­னரும் உணர்ந்துகொள்வர்.

இங்கு மாணவர்களை தாக்கிவிட்டு தம்மை நியாயப்படுத்திக் கொண்டிருக்கும் பொலிஸ் ஊடகப்பேச்சாளருக்கு நாம் ஒன்றை மட்டுமே கூற விரும்புகின் றோம். அவர் தமது பேச்சாளர் பத வியிலி ருந்து சற்று காலம் விலகிச் சென்று சட் டம் பயின்ற பின்னர் மீண்டும் ஊடகப் பேச்சாளர் தொழிலில் இணைந்து கொள் வது சிறந்தது என்றார்.