Breaking News

வடக்கில் நிரந்தர வைத்தியர்கள் இன்றி 32 வைத்தியசாலைகள் - வடமாகாண சுகாதார அமைச்சர்

வட­மா­கா­ணத்­தி­லுள்ள 102 வைத்­தி­ய­சா­லை­களில் 32 வைத்­தி­ய­சா­லைகள் நிரந்­தர வைத்­தி­யர்கள் இன்றி இயங்கி வரு­வ­தாக வடக்கு மாகாண சுகா­தார அமைச்சர் ப.சத்­தி­ய­லிங்கம் தெரி­வித்­துள்ளார்.

கிளி­நொச்சி மலை­யா­ள­புரம் பகு­தியில் அமைக்­கப்­பட்ட ஆரம்ப சுகா­தார நிலை­யத்தின் புதிய கட்­ட­டத்­தி­றப்பு விழா கடந்த வாரம் நடை­பெற்­றது.இதில் கலந்து கொண்ட வடக்கு மாகாண சுகா­தார அமைச்சர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

வடக்கு மாகா­ணத்தில் தற்­போது யாழ்.போதனா வைத்­தி­ய­சாலை தவிர்ந்த 102 வைத்­தி­ய­சா­லைகள் உள்­ளன. இதில் 32 வைத்­தி­ய­சா­லை­களில் நிரந்­தர வைத்­தி­யர்கள் எவரும் இல்­லாத நிலை காணப்­ப­டு­கின்­றது. இங்கு ஓய்வு பெற்ற வைத்­தி­யர்கள் 16 பேர் வரையில் ஒப்­பந்த அடிப்­ப­டை­யிலும் பல்­க­லைக்­க­ழக மருத்­துவ படிப்பை முடித்து விட்டு உள்­ளக பயிற்­சிக்­காக இருக்கும் மாண­வர்­களை கொண்டும் பல வைத்­தி­ய­சா­லை­களை இயக்கி வரு­கின்றோம். இருந்தும் பல வைத்­தி­ய­சா­லை­களில் வைத்­தியர் பற்­றாக்­குறை காணப்­ப­டு­கின்­றது.

இதே­வேளை வவு­னியா மாவட்­டத்­திலும் அதற்கு அடுத்­த­ப­டி­யாக முல்­லைத்­தீவு மாவட்­டத்­திலும் சிறு­நீ­ரக நோயா­ளர்­கள் அதி­க­ளவில் காணப்­ப­டு­கின்­றனர். இவ்­வாறு இள­வ­யதில் தொற்­றாத நோய்­க­ளுக்­குள்­ளாவோர் தொகை அதி­க­ரித்து காணப்­ப­டு­கின்­றது.

வடக்கு மாகாண சபை­யினால் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் தற்­போது வரை 6 வைத்­தி­ய­சா­லைகள் திறந்து வைக்­கப்­பட்­டுள்­ளன.

வட­மா­கா­ணத்­தி­லுள்ள வைத்­தி­ய­சா­லை­க­ளுக்கு நிரந்­தர வைத்­தி­யர்­களை எதிர்­வரும் டிசம்பர் மாத­ம­ளவில் தரு­வ­தாக மத்திய சுகா­தார அமைச்சர் ராஜித சேனா­ரத்­ன எமக்கு உறு­தி­ய­ளித்­துள்ளார்.

மேலும் மாங்­கு­ளத்தில் புனர்வாழ்வு வைத்தியசாலை ஒன்றினையும் கிளி நொச்சியில் நவீன வச-தியுடன் கூடிய முதியோர் இல்லம் ஒன்றி-னையும் அமைக்க வுள்ளோம். அதற்-கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம் என்றார்.