அரசியல் கைதிகளை விடுதலை செய்து நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்! -கூட்டமைப்பு
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதன் மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த அரசாங்கம் நாட்டில் நீதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் இதன் காரணமாகவே மக்கள் அந்த அரசாங்கத்தை தோர்தலில் தோற்கடித்ததாகவும் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் சிவபிரகாசம் தெரிவித்துள்ளார்.
அவன்கார்ட் விவகாரத்தில் சட்டம் சாிவர அமுல்படுத்தப்பட வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ள அவர், இதன் மூலம் மக்களுக்கு நீதி பாிபாலனம் மீது நம்பிக்கை பிறக்கும் என்று கூறியுள்ளார்.