ராஜிதவினால் வருத்தமடைந்துள்ள பிரதமர்
அவன்கார்ட் மெரிடைம் நிறுவனம் தொடர்பில் ஜனாதிபதியினால் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை மிகைப்படுத்தி, ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுவது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மிகவும் வருத்தத்தில் உள்ளார் என அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
அவன்கார்ட் மெரிடைம் நிறுவனத்தின் செயற்பாட்டு நடவடிக்கைகளை கடற்படையினரால் மேற்கொள்ள முடியுமா என அறிக்கை ஒன்றினை வழங்குமாறு கடற்படை தளபதிக்கு அறிவித்த ஜனாதிபதி,
குறித்த கூட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு எவ்வித தகவல்களையும் வெளியிட வேண்டாம் என கலந்துகொண்டவர்களிடம் கேட்டு கொண்டுள்ளார்.
எனினும், அவன்கார்ட் மெரிடைம் நிறுவனத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலுள்ள அனைத்து உடன்படிக்கைகளையும் இரத்து செய்து அதனை கடற்படையின் கீழ் கொண்டு வருவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளர்.
அவன்கார்ட் மெரிடைம் நிறுவனத்தை தடை செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் பொலிஸ்மா அதிபர், சட்டமா அதிபர், பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி, கடற்படை தளபதி, ரக்னா லங்கா பிரதிநிதிகள் உட்பட அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, விஜயதாஸ ராஸபக்க்ஷ, பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பித்தக்கது.