Breaking News

நடந்தவற்றை எண்ணி வடக்கு, கிழக்கு மக்கள் சோர்ந்து விடாது மன வலிமையுடன் இருக்க வேண்டும்

நடந்­த­வற்றை எண்ணி வடக்கு, கிழக்கு மக்கள் சேர்ந்து இருக்­காது மனவலி­மை­யுடன் இருக்­க­வேண்டும் என வட மா­காண முத­ல­மைச்சர் சி.வி விக்கி­னேஸ்­வரன் தெரிவித்தார்.

வட மாகாண தட­கள விளை­யாட்டு விழாவை சனிக்கிழமை வவு­னியா தேசிய கல்­வி­யியல் கல்­லூரி மைதா­னத்தில் ஆரம்­பித்து வைத்து உரை­யாற்றும் போதே அவர் இவ்­வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தமக்கு நடந்த துன்­பியல் சம்­ப­வங்­களில் மனம் லயித்து வாட்­டத்தில் பொழுதை கழிக்­காமல் சிறந்த மன வலி­மை­யையும் உடல் வலி­மை­யையும் பெற நாங்கள் ஆவன செய்ய வேண்டும்.

இன்று விளை­யாட்டு வீரர்கள் நவீன முறை­யி­லான விளை­யாட்டு யுக்­தியை கற்­றுக்­கொண்டு விளை­யாட்டில் தேர்ச்சி பெறு­வ­தற்கு உப­க­ரண பற்­றாக்­குறை என்­பது பெரும் குறை­யா­கவே உள்­ளது. நான் அண்­மையில் மன்­னாரில் திறந்து வைத்த விளை­யாட்டு அரங்கு எந்­த­ள­விற்கு பய­னுள்­ள­தாக அமையும் என்­ப­தனை நானறியேன். எனினும் அதனை திறந்த காற்­றோட்­ட­முள்ள இட­மாக மாற்றி மாணவ மாண­விகள் பயன்­பெற நாங்கள் ஆவன செய்­ய­வேண்டும்.

அத்­துடன் ஒவ்­வொரு மாவட்­டத்­திலும் நல்ல விளை­யாட்டு அரங்­குகள் கட்­டப்­பட்டு விளை­யாட்டு வீரர்­க­ளுக்கு போதிய பயிற்சி அளிக்­கப்­ப­ட­வேண்டும்.

வடக்­கு­ மா­கா­ண­ச­பையின் விளை­யாட்டுத் திணைக்­க­ளத்­தினால் வரு­டா ­வ­ருடம் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­ற­ வி­ளை­யாட்டுப் போட்­டிகள் இம்­மு­றை­ வ­வு­னி­யா­ மா­வட்­டத்தில் வவு­னி­யா ­ந­க­ர­ச­பை ­வி­ளை­யாட்­டு­ மை­தா­னத்தில் நடை­பெற இருந்­த­ போதும் கடும் மழை­ வெள்ளம் கார­ண­மாக இந் நிகழ்­வுகள் வவு­னி­யா­ கல்வி­யியற் கல்­லூரி விளை­யாட்­டு ­மை­தா­னத்­திற்­கு ­மாற்­றப்­பட்டு­ நி­கழ்­வுகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள இத் தரு­ணத்தில் உங்கள் முன் ஓரி­ரு­வார்த்­தைகள் பேசு­வதில் மகிழ்­வடை­கின்றேன்.

வடக்­கு­ மா­கா­ணத்தின் ஐந்­து­ மாவட்­டங்­க­ளிலும் தனித்­த­னி­யாக இந்­த ­த­ட­களப் போட்­டிகள் ஆரம்­பத்தில் நடத்­தப்­பட்டு­ அதில் வெற்­றி­ பெற்­ற­ வீ­ர­ வீ­ராங்­க­னை­க­ளுக்­கி­டை­யே­யா­ன­ போட்­டி­யாக இன்­றை­ய­ போட்­டி­ மா­கா­ண­ மட்­டத்தில் அமைந்­துள்­ளது.

இதில் வெற்­றி­ பெ­று­கின்­ற­ வீ­ர­, வீ­ராங்­க­னைகள் தேசி­ய மட்­ட­ வி­ளை­யாட்டுப் போட்­டி­களில் பங்­கு­ பற்­று­வ­தற்­கு­ வாய்ப்­பளிக்­கப்­ப­டுவர்.இந்­த ­வ­கையில் இன்று வெற்றி வாகை சூட இருக்­கின்ற வீர­ வீ­ராங்கனைக­ளுக்­கு­மு­தற்கண் என­து ­பா­ராட்­டுக்­களைத் தெரி­வித்துக் கொள்­கின்றேன்.

மாவட்­ட ­மட்­டத்தில் வெற்றி பெற்ற விளை­யாட்டு வீர, வீ­ராங்­க­னை­களப் பாராட்­டு­வ­தற்கும் அவர்­களை உற்சாகப்படுத்­து­வ­தற்­கு­மாக அவர்­களின் வர்ண புகைப்­ப­டங்­களைத் தாங்கிய விசேட மலரொன்றும் இங்­கே­ வெளியிட்­டு ­வைக்­கப்­பட்­டுள்­ளது. இம் மலர் வெளியீ­டா­ன­து­ வெற்­றி­ பெற்­ற­ வீ­ரர்­க­ளை ­கௌ­ர­விப்­ப­துடன் இப்­போட்­டி­க­ளில் ­க­லந்­து­கொண்­ட ­வீ­ர­, வீ­ராங்­க­னை­க­ளை­ எதிர்வரும் போட்­டி­களில் இன்னும் முனைப்­புடன் செயற்­பட்­டு­ ப­ல ­ப­ரி­சில்­க­ளை­ப் பெற்றுக் கொள்­ள ­ஒ­ரு ­உந்­து­சக்­தி­யா­க ­அ­மை­யு­மென்­பதில் ஐய­மில்லை.

மாண­வர்கள் புத்­தகக் கல்­வி­யுடன் மட்டும் நின்­று­வி­டாது இணை­ பா­ட­வி­தா­ன ­செ­யற்­பாடு­க­ளிலும் ஈடு­பட்டுத் தம­து­ தி­றமை­க­ளை­ வெளிக்­கொ­ணர்­வ­தற்­கு ­ஏ­து­வாக இவ்­வா­றா­ன­ வி­ளை­யாட்டுப் போட்­டிகள் நடத்­தப்­ப­டு­கின்­றன. வட­பு­ல ­மா­ண­வர்கள் விளை­யாட்­டிலும் மிகத் திற­மை­யா­ன­வர்கள் என்­ப­தனைக் கடந்­த ­சி­ல­வ­ரு­டங்­களில் நிரூ­பித்துக் காட்­டி­யுள்­ளார்கள்.

எங்கள் மாண­வ, ­மா­ண­வி­யர்கள் எவ­ருக்கும் சளைத்­த­வர்கள் அல்ல. அவர்­க­ளுக்­கா­ன அ­னு­ச­ர­ணை­க­ளையும் உத­வி­க­ளையும் ஊக்­கு­விப்­பையும் வழங்­கினால் அவர்கள் நாட்டில் முதல் இடத்தைப் பெறக் கூடி­ய­வர்கள் என்­பதில் எனக்­கு ­எந்­த­வி­த­ சந்­தே­க­மு­மில்லை. மாண­வர்கள் நன்­றா­க­ ஓடிக் களைத்­து­ வி­ளை­யாட்­டுக்­களில் ஈடு­ப­டு­கின்ற­ போ­து­ அ­வர்­களின் உட­லிலும் உள்­ளத்திலும் ஒரு­புத்­து­ணர்ச்­சியும் உத்­வே­கமும் ஏற்­ப­டு­கின்­றது. உண்­மையில் அவ்­வா­றா­ன ­உத்­வேகம் அவர்­களைக் கல்­வி­யிலும் மேம்­படச் செய்­கின்­றது.

இன்­று ­ப­ல­ பிள்­ளைகள் கல்­வியில் சிறப்­பாகச் செயற்­ப­டு­கின்­ற­போதும் விளை­­யாட்­டுக்­களில் அவர்கள் ஈடு­ப­டு­வ­தில்லை. அதற்குப் பெற்­றோரும் ஒரு­கா­ர­ண­மா­கின்­றனர். தம்­பி­ ப­டி­ப­டி­ என்­று கல்­வி­கற்­பித்­தலில் மட்­டு­மே­ கண்­ணாக­ இ­ருக்­கின்­றார்கள். தம­து ­பிள்­ளை­களின் உடல் விருத்­திக்கும் மூளை வளர்ச்­சிக்கும் விளை­யாட்­டுக்கள் அவ­சியம் என்­பதை எண்­ண­ ம­றந்­து­வி­டு­கின்­றார்கள். எம் குழந்­தை­களின், பிள்­ளை­களின் உடலும் உள்­ளமும் அறிவும் ஒருங்­கே­ வ­ள­ரவும் விருத்­தி­ய­டை­யவும் நாம் அவற்­றிற்­கா­ன­ ந­ட­வ­டிக்­கை­க­ளையும் எடுக்­க­வேண்டும்.

விளை­யாட்­டுக்கள் ஒரு­ம­னி­த­னுக்­கு­ ஆ­ரோக்­கி­ய­மா­ன உ­டல்­வ­லு­வை ­வ­ழங்­கு­கின்­றது. விளை­யாட்­டுக்­க­ளிலும் தொடர் பயிற்­சி­க­ளிலும் ஈடு­ப­டு­கின்­ற­வர்கள் சிறந்­த­ஆ­ரோக்­கி­யத்தைக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். ஏனை­ய­வர்கள் சிறு­வ­ய­தி­லே­யே­ ப­ல­ வ­ருத்­தங்­க­ளினால் உபாதைப்படு­கின்­றார்கள். என­வே­ வி­ளை­யாட்­டுக்­களும், உடற்­ப­யிற்­சி­க­ளும்­ எல்­லா ­வ­ய­தி­ன­ருக்கும் எல்லா சந்­தர்ப்­பத்­திலும் அத்­தி­யா­வ­சி­ய­மா­னவை.சிறந்­த ­தே­க ­ஆ­ரோக்­கி­யத்­துடன் இருப்­பதால் நீண்­ட­காலம் சுக­தே­கி­க­ளா­க ­வா­ழ­ முடியும். ஆகவே, இன்­று­ போட்­டி­களில் ஈடு­படும் மாண­வ­ மா­ண­வியர் மட்­டு­மல்­லாமல் எம­து­ ச­க­ல ­மா­ண­வ­ ச­மு­தா­யமும் உட­லை­ ஆ­ரோக்­கி­ய­மா­க­ வைத்­தி­ருக்­க ­உ­ரி­ய ­ந­ட­வ­டிக்­கைகள் எடுக்­க­வேண்டும்.

நான் 1987ஆம் ஆண்டில் சீனாவின் தலை­நகர் பீஜிங் சென்றேன். அங்­கி­ருந்த இரு வாரங்கள் என்­னை ­ஈர்த்­த­ காட்­சி தி­னமும் அதி­கா­லையில் கடும் குளிரில் எவ்­வா­று­ அந்­நாட்டு இளைஞர், யுவ­திகள், வய­து­வந்தோர் அனை­வரும் தேகப்­பி­யா­சங்­களில் ஈடு­ப­டு­கின்­றார்கள் என்­பதே. தாய்ச்­சி­ என்­ற ­மி­கவும் கட்­டுப்­பா­டா­ன ­மெ­து­வா­க உ­ட­லை ­ந­கர்த்தும் பயிற்­சி­களில் அனை­வரும் கிடைத்த இடங்­க­ளி­லெல்­லாம்­ ஈ­டு­பட்­டி­ருந்­தமை­ கண்­டு­ வி­யந்தேன். காலையில் கடும் குளிரில் இப்­பேர்ப்­பட்­ட­ ப­யிற்­சி­களில் ஈடு­பட்டால் உடல் சுறு­சு­றுப்­பாக முழு நாளும் வேலை ­செய்யும் என்­று ­எ­ன­து ­சீ­ன­ நண்பர் ஒருவர் அப்­போ­து­ க­ருத்துத் தெரி­வித்தார்.

பொது­வா­க ­ஐம்­ப­து ­வ­ய­துக்­கு­ மேற்­பட்­ட­வர்கள் கட்­டா­ய­மாகத் தாய்ச்­சி­ அப்­பி­யா­சங்­களில் ஈடு­பட்­டு­ வ­ரு­வ­தாக­ அ­றி­வித்தார். மன­ அ­ழுத்தம், உடல் அழுத்தம் ஆகி­ய­வற்றைப் போக்­க ­மெ­து­வாக மூச்­செ­டுப்­ப­துடன் மெது­வா­க ­உ­ட­லை ­சி­ல­ அ­சை­வு­க­ளிலும் நகர்­வு­க­ளிலும் ஈடு­ப­டுத்­து­வ­தே­ தாய்ச்­சி­யாகும். சீனர்கள் இப்­பேர்ப்­பட்­ட ­உடல் அசை­வு­க­ளுக்கும் அப்­பி­யா­சங்­க­ளுக்கும் எவ்­வ­ள­வு­ முக்­கி­யத்­துவம் கொடுக்­கின்­றார்கள் என்­ப­தை நான் அறிந்து­ கொண்டேன். சில ­மேற்­கு­ நா­டு­களில் காலையில் கூட்­டாகப் பல­ ஆ­யிரம் பேர்கள் பலமைல் தூரம் சைக்கிள் சவா­ரி­ செய்யும் காட்­சி­யையும் கண்­டுள்ளேன். அந்­தந்­த­ நாடுகள் எவ்­வா­று ­உடல் பயிற்­சிக்­கு ­முக்­கி­யத்­துவம் கொடுத்­து ­வ­ரு­கின்­றார்கள் என்­பதை­ அ­றிந்­து­ கொண்டேன்.

போரின் போது ­ப­ல­வி­த ­ம­ன­ அ­ழுத்­தங்­க­ளுக்­கு­ ஆ­ளா­ன எ­ம­து­ வ­ட­மா­கா­ண­ மக்கள் இனித் தம்­மை­ அந்­த ­அ­ழுத்­தங்­களில் இருந்து ­வி­டு­படச் செய்யக் கற்றுக் கொள்­ள­வேண்டும். அதற்குப் பிரா­ணா­யாமம், யோகப்­பி­யாசம், உடல் பயிற்­சிகள், நீந்­துதல், சைக்கிள் ஓடுதல் போன்­ற ­பலதும் உறு­து­ணை­யாக இருப்­ப­ன­ என்­ப­தை நாம் மறக்கக் கூடாது. எமக்­கேற்­ற­வா­று ­ப­யிற்­சி­களில் ஈடு­ப­ட ­நாங்கள் முன்­வ­ர­வேண்டும். வடக்­கு,­ கி­ழக்­கு ­மா­கா­ண­ தமிழ் மக்கள் தஎமக்­கு­ ந­டந்­த ­துன்­பியல் நட­வ­டிக்­கை­களில் மனம் இல­யித்­து­ வாட்­டத்தில் பொழுதைக் கழிக்­காமல் சிறந்­த­ம­ன ­நி­லை­யி­னையும் உடல் வலு­வையும் பெற­ நாங்கள் ஆவன செய்யவேண்டும் என்று சொல்லிவைக்கின்றேன்.

அடுத்து இன்­னொரு விட­யத்தைக் கூற விரும்­பு­கின்றேன். இன்று விளை­யாட்டு வீரர்கள் நவீன முறை விளை­யாட்டு யுக்­தி­களைக் கற்றுக் கொண்டு விளை­யாட்­டுக்­களில் தேர்ச்சி பெறு­வ­தற்கும் முன்­ன­ணி­ வ­கிப்­ப­தற்கும் உப­க­ரண பற்­றாக்­குறை ஒரு பெருங் குறையாக உள்ளது.

கரப்பந்தாட்டங்களை மூடிய அறைகளில் Indoor Games ஆக நடத்துவதற்குரிய Indoor Playground Facilities இல்லாமை ஒரு பெருங் குறை­யாகும். எந்த அள­வுக்கு நான் அண்­மையில் மன்­னாரில் திறந்­து வைத்த விளை­யாட்­ட­ரங்கம் பய­னு­டைத்து என்­பதை நான் அறியேன். அதனைக் காற்­றோட்டம் மிக்­க­தாக ஆக்கி உரிய நன்­மை­களை மாண­வ­மா­ண­வியர் பெற நாம் ஆவன செய்­ய­வேண்டும். அத்­துடன் ஒவ்­வொரு மாவட்­டத்­திலும் நல்ல விளை­யாட்­ட­ரங்­கங்கள் கட்­டப்­பட்டு விளை­யாட்டு வீரர்­க­ளுக்குப் போதிய பயிற்சி அளிக்­கப்­ப­ட­வேண்டும்.

அது­போல உயரம் பாய்தல்,கோலூன்றிப் பாய்தல் போன்ற விளை­யாட்­டுக்­களை விளை­யா­டு­வ­தற்­கு­ரிய Mat போன்ற உப­க­ர­ணங்கள் இன்­மையால் விசேட பயிற்­சி­களைப் பெற­மு­டி­யா­துள்­ளது என்­ப­தையும் நான் அறிவேன். மாண­வ­ மா­ண­வி­யர்க்­கான நவீன விளை­யாட்டு உப­க­ர­ணங்­க­ளையும் வச­தி­க­ளையும் பெற்றுக் கொடுக்­க­வேண்­டிய பொறுப்பு எமது விளை­யாட்டுத் திணைக்­க­ளத்­திற்­கு­ரி­ய­தாகும். சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரிகள் இது விட­யத்தில் போதிய கரி­சனை எடுத்து எமது மாணவ சமுதாயத்தின் விளையாட்டுத் திறனை மேம்படச் செய்ய சகல நடவடிக்கைகளும் எடுக்கவேண்டும்.