Breaking News

உங்கள் முடிவு என்ன என்பதை மக்களுக்கு கூறுங்கள் - தமிழ் தேசியக்கூட்டமைப்பிடம் ஆனந்தசங்கரி கோரிக்கை

சிறையில் உள்­ள­வர்கள் அர­சியல் கைதிகள் இல்லை போர்க்­குற்­ற­வா­ளிகள் என்ற நிலைப்­பாட்டை அரசு முன்­னெ­டுப்­ப­தற்கு இட­ம­ளிக்­காது அர­சுக்கு நிபந்­தனை விதித்து ஆத­ர­வ­ளி­யுங்கள். இந்த விடயம் மனி­தா­பி­மான விட­யமே அன்றி அர­சியல் அல்ல என்­பதை அர­சுக்கு உணர்த்­துங்கள் என தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் பொதுச்­செ­ய­லாளர் வீ.ஆனந்­த­சங்­கரி தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பிடம் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

இது குறித்து அவர் வெளி­யிட்­டுள்ள ஊடக அறிக்­கை­யி­லேயே இவ்­வாறு கூறி­யுள்ளார்.

அதில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது,

விரைவில் விடு­த­லை­யாவோம். 15, 20 வருட கனவு நன­வா­கி­றது என்று மனப்பால் குடித்­துக்­கொண்­டி­ருக்கும் தமிழ் அர­சியல் கைதி­க­ளுக்கு அமைச்சர் மஹிந்த அம­ர­வீரவின் கூற்று பெரும் அதிர்ச்­சியை தந்­தி­ருக்கும்.

கணவர் வரப்­போ­கிறார் என்று மனை­வியும், பிள்ளை வரப்­போ­கிறான் என்று அம்மா அப்பா, அப்பா வரப்­போ­கிறார் என்று பிள்­ளைகள் என இவர்கள் ஒவ்­வொரு வினா­டியும் எண்ணிக் கொண்டு அந்தநாளை எதிர்­பார்த்துக் கொண்­டி­ருந்த உற­வு­க­ளுக்கு எத்­த­கைய உணர்­வுகள் ஏற்­படும் என்று சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் சிந்­திப்­பார்­களா?

அரசு மாறி­யது யாரால்? குற்றம் புரிந்­தவர் யார்? இந்த நிலை உரு­வா­கி­யது யாரால்? அவர்­க­ளுக்குத் தண்­டனை இல்லை எனவும், பாது­காப்பும் உறுதி செய்­யப்­பட உள்­ளது என்றால் விசா­ர­ணை­யா­ரிடம்? விடு­தலைப் புலி­க­ளி­டமா? அதை வற்­பு­றுத்தி கேட்­ட­வர்கள் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பெயரில் இயங்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இல்­லையா?

உங்கள் முடி­வுதான் என்ன என்­பதை மக்­க­ளுக்கு கூறுங்கள். தமிழ் அர­சியல் கைதி­க­ளுக்கு விடு­தலை கிடைக்­கா­விட்டால் உங்கள் பத­வி­களை இரா­ஜி­னாமா செய்­யுங்கள் அல்­லது பாரா­ளு­மன்­றத்தில் உண்­ணா­வி­ரதம் இருங்கள். அல்­லது வீதிக்கு இறங்­குங்கள். இந்த அப­லை­க­ளுக்கு உத­வுங்கள்.

சிறையில் உள்­ள­வர்கள் அர­சியல் கைதிகள் இல்லை போர்க்­குற்­ற­வா­ளிகள் என்ற நிலைப்­பாட்டை அரசு முன்­னெ­டுப்­ப­தற்கு இட­ம­ளிக்­காது அர­சுக்கு நிபந்­தனை விதித்து ஆத­ர­வ­ளி­யுங்கள். இந்த விடயம் மனி­தா­பி­மான விட­யமே அன்றி அர­சியல் அல்ல என்­பதை அர­சுக்கு உணர்த்­துங்கள்.

நான் எவ­ரையும் எதற்கும் தூண்­டு­வ­தில்லை. மனி­தா­பி­மான அடிப்­ப­டையில் சிந்­தித்­துப்­பார்த்தால் விளை­வுகள் பார­தூ­ர­மா­ன­வை­யாக அமைந்­து­விடும் என்­ற­தொரு அச்சம் ஏற்­ப­டு­கி­றது.

இந்த விடயம் சம்­பந்­த­மாக பாரா­ளு­மன்­றத்தில் 16 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இருந்தும் அவர்கள் ஒன்று சேர்ந்து ஜனா­தி­ப­தி­யையோ அல்­லது பிர­தம மந்­தி­ரி­யையோ சந்­தித்­துள்­ளார்­களா? பாராளுமன்ற ஆசனம் அலங்காரப் பொருளல்ல என்பதையும் அப்பாவிகளின் உயிர் வெறும் செல்லாக்காசாகவும் எண்ணாதீர்கள்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கோரிக்கையை முன்வைத்து பாராளுமன் றத்தை விட்டு வெளியேறுங்கள். என, அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.