Breaking News

திருகோணமலை நிலக்கீழ் முகாம் காலணித்துவ ஆட்சிக் காலத்தில் நிர்மானிக்கப்பட்டது - கடற்படை

திருகோணமலை கடற்படை முகாமில் அமைக்கப்பட்டுள்ள நிலக்கீழ் முகாம் காலணித்துவ ஆட்சிக் காலத்தில் நிர்மானிக்கப்பட்டதாக கடற்படைத் தளபதி சிங்கள ஊடகமொன்றிற்கு குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலை கடற்படை முகாமில் காணப்படும் நிலக்கீழ் முகாம் தொடர்பில் பல்வேறு சர்சைகளும், விமர்சனங்களும் எழுந்துள்ள நிலையில், அதற்கு பதில் வழங்கும் வகையில் இலங்கை கடற்படையினர் இவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளனர்.

திருகோணமலை கடற்படை முகாமில் நிழக்கீழ் முகாமி; இரகசிய சிறைக் கூடமொன்று அமைக்கப்பட்டு இயங்கி வந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இதுகுறித்து கருத்துரைத்துள்ள கடற்படைத் தளபதி, ‘இலங்கை பிரிட்டன் காலணித்துவ ஆட்சியில் இருந்த போது இந்த நிலக்கீழ் முகாம் நிர்மானிக்கப்பட்டதாகவும், பிரிட்டன் ஆட்சியாளர்களினால் நிர்மானிக்கப்பட்ட நான்கு நிலக்கீழ் ஆயுதக் களஞ்சியங்கள் திருகோணமலை கடற்படை முகாமில் காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

கடற்படை முகாமின் பாதுகாப்பிற்காக இந்த ஆயுதக் களஞ்சியம் நிர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் காலத்தில் பீரங்கி வெடிகுண்டுகளை களஞ்சியப்படுத்தவும் அந்தப் பணியில் ஈடுபட்ட கடற்படையினர் தங்கி ஓய்வெடுக்கவும், அது பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

‘இந்த படைமுகாம் முகாம் வான் தாக்குதல்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அண்மையில் இலங்கைக்கடற்படையினர் இந்த நிலக்கீழ் முகாமினை பொருட்களை களஞ்சியப்படுத்த பயன்படுத்தியுள்ளது.

மேலும் இந்த முகாமை பார்வையிடுவதற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதிகளுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. இந்த விடயம் தொடர்பில் நீதிமன்றில் விசாரணையொன்று நடத்தப்பட்டு வருகின்றது’ என கடற்படையின் தளபதி மேலும் குறிப்பிட்டார்.