தலைமன்னார் – இராமேஸ்வரம் பாலம் அமைக்கும் இந்தியாவின் திட்டத்தை இலங்கை நிராகரிப்பு
தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையில் பாலம் அமைக்கும் இந்தியாவின் திட்டத்துக்கு, இலங்கை அரசாங்கம் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இலங்கையின் உயர்கல்வி அமைச்சர், லக்ஸ்மன் கிரியலெ்ல இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையில் பாலம் அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக, இந்தியாவின் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கடந்த புதன்கிழமை தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல, இந்த திட்டத்துக்கு இலங்கை இணக்கம் தெரிவிக்காது என்று குறிப்பிட்டார்.
“இதனை நாம் எதிர்க்கிறோம். ஏனென்றால், இதனை இலங்கை மக்கள் எதிர்க்கின்றனர். தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையில் பாலம் அமைப்பதற்கு நாம் அனுமதிக்க முடியாது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 

 
 
 
 
 
 











