Breaking News

2015ஆம் ஆண்டு வடமாகாணசபை வரவு செலவு(காணொளி)

வடமாகாண சபைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட
2015ம் ஆண்டுக்கான குறித்து ஒதுக்கப்பட்ட மாகாண அபிவிருத்தி நன்கொடை நிதி மூலம் 738 செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு 83 வீதமான நிதி செலவு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இன்றைய சபை அமர்வில் வெளிப்படுத்தியிருந்தார்.

கடந்த சில மாதங்களாக மாகாண முதலமைச்சர் மீதும் வடமாகாணசபைமீதும் அவர்கள் ஒதுக்கிய நிதியில் 35வீதமான நிதியினையே அவர்களால் செலவிட முடிந்தது என்றும் மிகுதி நிதி திரும்பிச்செல்லவுள்ளதாகவும் சிலர் விசம பிரச்சாரங்களை செய்து வந்திருந்த நிலையில் முதல்வர் இன்று உண்மைகளை தெளிவுபடுத்தியுள்ளனர்.

மாகாண கல்வி அமைச்சின் கல்வி நியதிச்சட்டம் அங்கீகரிப்பிற்கான விசேட அமர்வு நேற்று பேரவை செயலகத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போது 28.12.2015 ம் திகதி வரையில் மாகாணசபைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 2015ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டின் செலவீட்டு தகவல்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

குறித்த விடயம் தொடர்பில் முதலமைச்சர் மேலும் குறிப்பிடுகையில், கடந்த 2015ம் ஆண்டு குறித்து ஒதுக்கப்பட்ட மாகாண அபிவிருத்தி நன்கொடை நிதியில் அமைச்சுக்கள் ரீதியாக செலவீடுகளை பார்க்கும் போது, 

விவசாய அமைச்சு 238 வேலைத்திட்டங்கள் ஊடாக 98வீதமான நிதியை செலவு செய்திருக்கின்றது. 

கல்வி அமைச்சு 217 வேலைத்திட்டங்கள் ஊடாக 73 வீ தமான நிதியை செலவு செய்திருக்கின்றது. 

சுகாதார அமைச்சு 107 வேலைத்திட்டங்கள் ஊடாக 78 வீதமான நிதியை செலவிட்டுள்ளது. 

மீன்பிடி அமைச்சு 145 வேலைத்திட்டங்கள் ஊடாக 98வீதமான நிதியை செலவிட்டிருக்கின்றது. மு

தலமைச்சர் அமைச்சு 131 வேலைத்திட்டங்கள் ஊடாக 80 வீதமான நிதியை செலவீடு செய்திருக்கின்றது. 


எனவே மொத்தமாக 738 செயற்றிட்டங்களுக்காக குறித்து ஒதுக்கப்பட்ட மாகாண அபிவிருத்தி நன்கொடை நிதி 1440 மில்லியன் ரூபாயில் கட்டுநிதி விடுவிப்பு 1250.37 மில்லியன் ரூபாய் இதில் செலவு செய்யப்பட்டுள்ள நிதி 1190.92 மில்லியன்களாகும். எனவே மொத்த செலவீடு 83வீதமாகும் என முதலமைச்சர் சபையில் தெரிவித்ததோடு மாகாணசபை வருட இறுதி ஒன்று கூடலில் பேசும்போது இந்த அடிப்படையில் அடுத்த வருடம் ஒதுக்கப்பட்ட நிதி உரிய காலத்திற்குள் செயற்றிட்டங்கள் தொடங்கப்பட்டு செலவு செய்யப்படும் எனவும் முதல்வர் தெரிவித்தார்.