Breaking News

மகிந்த கருத்து சுதந்திரத்தை வழங்கவில்லையாம்! எஸ்.பி கூறுகிறார்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களின் கருத்துக்கு இடமளிக்கப்படவில்லை என கட்சி உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ராஜபக்ச அதிகாரத்தில் இருந்தபோது கொண்டுவரப்பட்ட சர்ச்சைக்குரிய 18 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு தாம் நிர்ப்பந்திக்கப்பட்ட வகையில் ஆதரவு வழங்கியதாக அவர் கூறியுள்ளார்.

எனினும் தற்போது எந்தவொரு விடயம் தொடர்பிலும் தமது கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாக எஸ்.பி.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.உறுப்பினர்கள் சுதந்திரமாக கருத்துக்களை தெரிவிப்பது பிளவுபட்டுள்ளோம் என அர்த்தப்படாது எனவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் எந்தவொரு பிளவும் இல்லை என சுட்டிக்காட்டியுள்ள எஸ்.பி.திஸாநாயக்க, அடுத்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிலேயே கட்சி போட்டியிடும் எனவும் கூறியுள்ளார்.