Breaking News

தம்பியை இரா­ணு­வமே கைது செய்­தது - ஈ.பி.­டி.­பி.க்கும் தொடர்பு - சகோ­தரி சாட்­சியம்

எனது தம்பி தனியார் கல்­வி­நி­லையம் ஒன்றை நடத்­தி­வந்­த­தோடு பிர­தேச ஊட­க­வி­ய­லா­ள­ரா­கவும் செயற்­பட்­டு­
வந்தார். அவரை இரா­ணு­வமே கைது செய்­தது. இரா­ணுவ முகா­மி­லி­ருந்து தொலை­பேசி வழி­யாக என்­னுடன் உரை­யா­டினார். என சாட்­சி­ய­ம­ளித்த சகோ­தரி ஈழ­மக்கள் ஜன­நா­யகக் கட்­சி­யி­ன­ருக்கும் இந்த சம்­ப­வத்­துடன் தொடர்பு உள்­ள­தாக சந்­தேகம் வெளி­யிட்டார்.

காணா­மல்­போனோர் தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­குழு பருத்­தித்­துறை பிர­தேச செய­ல­கத்தில் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை நடத்­திய அமர்வின் போது துன்­னாலை கிழக்கு கர­வெட்­டியைச் சேர்ந்த ஜெய­ரட்ணம் கம­லா­சினி என்­பவர் சாட்­சியம் அளிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் தனது சாட்­சி­யத்தில் மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது,

எனது தம்பி சும்­பி­ர­ம­ணியம் ராமச்­சந்­திரன் நெல்­லி­ய­டியில் தனியார் கல்வி நிலையம் ஒன்றை நடத்தி வந்தார். அத்­தோடு அவர் பிர­தேச ஊட­க­வி­ய­லா­ள­ரா­கவும் செயற்­பட்­டு­வந்தார். 2007ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் 17ஆம் திகதி வழ­மை­போன்று தனியார் கல்­வி ­நி­லை­யத்தை மூடி­விட்டு வீடு திரும்­பிக்­கொண்­டி­ருந்­த­வேளை கலிகைச் ­சந்­தியில் வைத்து இரா­ணு­வத்­தினர் இடை­ம­றித்து அங்­கி­ருந்த முகா­மிற்கு அழைத்துச் சென்­றுள்­ளனர். இதனை துன்­னாலையைச் சேர்ந்த கமல் என்­பவர் எம்­மி­டத்தில் தெரி­வித்தார். தன்­னுடன் ­வந்­த­போதே இந்தச் சம்­பவம் நிகழ்ந்­த­தா­கவும் இரா­ணுவ முகாமில் சென்று கோரும்­ப­டியும் கூறினார். அத­னை­ய­டுத்து நாம் மறுநாள் அந்த முகா­மிற்குச் சென்றோம். எனது தம்­பியின் பெயரைக் கூறி அவர்­க­ளி­டத்தில் கேட்டோம். அப்­போது தமக்கு அவரை யாரென்று தெரி­யாது என்றும் அவ்­வா­றான ஒரு­வரை கைது செய்­ய­வில்லை என்றும் கூறினர்.

இவ்­வாறு கூறி­ய­தை­ய­டுத்து நாம் பல்­வேறு இடங்­களில் தேடு­தல்­களை மேற்­கொண்­டி­ருந்­த­கா­லங்­களில் பருத்­தித்­து­றை­ மு­காமைச் சேர்ந்த இரா­ணு­வத்­தினர் நால்வர் டிரக் வண்டி ஒன்றில் எமது வீட்­டிற்கு வரு­கை­தந்து எனது தம்­பியின் பிறப்­பத்­தாட்சி பத்­திரம் மற்றும் அவ­ரு­டைய கல்விச் சான்­றி­தழ்கள் உள்­ளிட்ட ஆவ­ணங்கள் அனைத்­தையும் எடுத்துச் சென்­றனர். 2013ஆம் ஆண்டு எமது வீட்­டுக்கு அரு­கி­லுள்ள கிராம சேவகர் கூட்டம் ஒன்­றுக்­காக பல்­லப்பை ஆனை­வி­ழுந்தான் பகு­தி­யி­லுள்ள இரா­ணுவ முகா­மிற்குச் சென்­ற­போது எனது தம்­பியை அங்கு கண்­ட­தாக ஒருவர் தன்­னிடம் தெரி­வித்த­தாக எங்­க­ளி­டத்தில் கூறினார்.

சிறிது காலம் கழித்து தானே எனது தம்­பியை நேரில் கண்­ட­தா­கவும் அச்­சத்தின் கார­ண­மாக அதனை உடன் கூற­வில்லை எனவும் குறிப்­பிட்டார். எனினும் நாம் அச்சத்தின் காரணமாக அந்த இராணுவ முகாமுக்குச் செல்லவில்லை. ஆனால் மனித உரிமை ஆணைக்குழு இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட பொது அமைப்புகளிடத்தில் முறைப்பாடுகளை பதிவுசெய்தோம். தற்போதுவரை எனது தம்பியை தேடிக்கொண்டி இருக்கின்றேன் என்றார்.