Breaking News

ஈழ அகதிகள் தொடர்பில் கவலை

அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியுள்ள ஈழ அகதிகள் நீண்டகாலமாக காத்திருக்க வைக்கப்பட்டுள்ளதாக, அவுஸ்திரேலியாவின் மனித உரிமைகள் சட்டத்தரணிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

குறித்த ஈழ அகதிகள் அகதி அந்தஸ்த்து கோரி விண்ணப்பித்துள்ள நிலையில், அவுஸ்திரேலியாவின் குடிவரவுத் திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

எனினும் கடந்த இரண்டு வருடங்களில் 30 பேர் வரையிலேயே, விசாரணைகளை பூர்த்தி செய்திருப்பதாக கூறப்படுகிறது.இந்த தாமதத்தினால் அகதிகள் காத்திருக்கின்றமையானது, உயிர் சேதமடைவதற்கு சமமானது என்று சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இது குறித்த துரித நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்களால் வலியுறுத்தப்பட்டுள்ளது.