ஓமந்தையில் மீண்டும் சோதனை - அச்சத்தில் மக்கள்
ஓமந்தையில் மீண்டும் பொலிஸ் மற்றும் இராணுவத்தின் சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதனால் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் அனைத்து வாகனங்களின் இலக்கத்தகடுகள் பதிவு செய்யப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளன. ஓமந்தை சோதனை சாவடி மீண்டும் திறக்கப்பட்டமை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மஹிந்த அரசு நடைபெற்று முடிந்த பொது தேர்தலில் தோல்வியடைந்த நிலையில், வெற்றி பெற்றவர்கள் ஐக்கிய தேசிய பொது முன்னணி ஒன்றினை அமைத்து, நல்லாட்சி என்ற பெயருடன் ஆட்சியில் இருந்து வருகின்றனர். இதன் போது சில தளர்வுகளை வடக்கில் ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேசத்திடம் தம்மை காட்டிக்கொண்ட இந்த அரசு, காணமல் போனோர் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்தது.
இதே போல் அரசியல் கைதிகள் விடயம், உட்பட பல விடயங்களில் உறுதியளிப்பினை மேற்கொண்டிருந்தது. இந்த உறுதியளிப்புக்களில் ஒன்றாக ஓமந்தை சோதனை சாவடியும் அகற்றப்பட்டது. எனினும் தற்போது மீண்டும் அந்த சோதனை சாவடி பொலிசாரின் துணையுடன் இராணுவத்தின் தகவல் சேகரிப்புக்காக செயற்பட தொடங்கியுள்ளது. குறித்த சோதனை சாவடியால் செல்லும் வாகங்கள் அங்கு பொலிசாரினால் வழிமறிக்கப்பட்டு வாகங்கள் பதிவு செய்யப்படுகின்றன.








