இனவாதத்தை தூண்டி அரசியல் செய்யும் கட்சிகளை தடை செய்ய வேண்டும்
மற்றும் சமயங்களை அடிப்படையாகக் கொண்டு அரசியல் நடத்தும் அரசியல் கட்சிகளை தடை செய்யவேண்டுமென கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்தார்.
இன்று கொழும்பில் உள்ள ஆயர் இல்லத்தில் ஞானதீப பாத்திரிக்கையின் 150 ஆம் ஆண்டு நிறைவுயொற்றி நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்தே இக்கருத்தை வெளியிட்டார்.
சிங்க-லே ( சிங்கள - இரத்தம்) குறித்து கவனம் செலுத்தாமல் அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென தெரிவித்த அவர் , இனங்களின் அடிப்பையில் பிரதேசங்களை ஆதிக்கம் செலுத்த யாருக்கும் அதிகாரம் இல்லையெனவும் அவர் இதன்போது குறிப்பிட்டதோடு, ஞானதீப பத்திரிக்கை இனவாதமின்றி சமத்துவத்தயே முக்கிய கருப்பொருளாக கொண்டு வெளியிடப்பட்டு வருகிறது என்றும் தெருவித்தார்.








