யாழில் காதலர்கள் கிணற்றில் குதிப்பு - காதலன் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் காதலர்கள் கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்ய முயற்சித்த சம்பவம் ஒன்று இன்று காலை இடம்பெற்றுள்ளது.
இவர்கள் இருவரும் ஒருவருடமாக காதலித்து வந்ததாகவும், காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கோப்பாய் தெற்கு மாதா கோயிலடியைச் சேர்ந்த சிவபாதம் தினேஸ்குமார் (வயது 19), யோகராசா அனுசியா (வயது 21) ஆகியோரே இன்று காலை கிணற்றில் குதித்துள்ளனர்.
இதில் சிவபாதம் தினேஸ்குமார் என்பவர் உயிரிழந்துள்ளார். யோகராசா அனுசியா கிணற்றில் பாய்ந்த நிலையில் அதற்குள்ளிருந்த பைப்பை பிடித்தபடி நின்று உயிர்தப்பியுள்ளார்.மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.








