Breaking News

கடந்தகால ஆட்சியும் தற்போதைய ஆட்சியையும் ஒன்றே – தொழிற்சங்கம் குற்றச்சாட்டு

கொலன்னாவை எரிபொருள் களஞ்சியசாலையின் உரிமையை இந்தியன் எண்ணெய் நிறுவனத்திற்கு விற்பதற்கு அரசாங்கம் இரகசிய ஒப்பந்தங்களை செய்துள்ளதாக தொழிற்சங்கம் குற்றஞ் சுமத்தியுள்ளது.

கடந்த கால ஆட்சியின் போது கொலன்னாவை எண்ணைய் களஞ்சியசாலை மூன்றில் ஒரு பகுதியாக பிரிக்கப்பட்டு அதன் ஒரு பகுதி இந்தியன் எண்ணை நிறுவனத்திற்கு விற்பதற்கு முயற்சிகளை அன்றைய அரசாங்கம் மேற்கொண்டது.

அதேபோல் தற்போதைய அரசாங்கம் அவற்றை மீண்டும் அந்த நிறுவனத்திற்கு விற்பதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளதாக அந்த தொழிற்சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

எனவே ,அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கெதிராக இந்த நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ள இந்த சங்கத்தின் தலைவர் இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதியுடனும்,பிரதமருடனும் பேச்சு வார்த்தை ஒன்றை மேற்கொள்ளவிருப்பதாகவும் அது தோல்வியடையும் சந்தர்ப்பத்தில் வேலைநிறுத்தத்தில் குதிப்பதற்கு தயாராக இருப்பதாகவும் அந்தச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.