Breaking News

பாலசந்திரனை கொன்றது யுத்தக்குற்றமே! -ஒப்புக்கொண்டார் பொன்சேகா

2009 ம் ஆண்டு இறுதி யுத்தத்தின்போது இலங்கை இராணுவத்தால் பரிதாபமாக கொல்லப்பட்ட விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனுடைய கொலையும் ஒரு யுத்தக்குற்றமே என ஜனநாயகக் கட்சியின் தலைவரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லவில் அமைந்துள்ள கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறிய கருத்து தற்போது இலங்கை அரசியலில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன்போது, கிரித்தலே இராணுவ முகாமினை இதற்கு முன்னதாகவே மூடியிருக்க வேண்டுமெனவும் இவர் தெரிவித்தார்.