இலங்கையில் சீனக் கடற்படைக்கு இடமில்லை – ரணில் உறுதி
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கடற்படைத் தளத்தை அமைக்க சீனாவுக்கு இடமளிக்கப்படமாட்டாது என்று உறுதிய ளித்துள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
டாவோசில் நடக்கும் உலக பொருளாதார மன்றத்தின் மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, என்டிரிவி தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஒன்றிலேயே இவ்வாறு கூறியுள்ளார். “முன்னைய அரசாங்கம் பதவியில் இருந்த போது, அம்பாந்தோட்டையில் துறைமுகம் கட்டப்பட்டதை இந்தியா அறியும்.
அங்கு சீனக் கடற்படைக் கப்பல்கள் தளம் அமைக்கவோ தரித்து நிற்கவோ அனுமதிக்கப்படாது. அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இந்தியாவோ அல்லது வேறு எந்த நாடோ முதலீடுகளை மேற்கொள்ள முடியும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.








