Breaking News

புதிய அரசியல் அமைப்பு நாட்டை பிளவுபடுத்தும் - தினேஷ் எச்சரிக்கை

புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியல் அமைப்பில் நாடு பிளவுபடுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.இப்போதைய அரசியல் திட்டத்தில் இலங்கை ஒரு ஒற்றையாட்சி நாடென குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பு மாதிரியில் இந்த விடயம் அகற்றப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் பிரதான பங்காளர்களான தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் என்பன ஏற்கனவே ஒற்றையாட்சியிலிருந்து விலக வேண்டும் என, தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் தற்போது சமஷ்டி அரசியல் முறைமைக்கு அப்பால் சென்று புதிய அரசியல் முறைமை ஒன்று தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் இதனால் நாடு இரண்டாக்கப்படுவதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார்.