"இலக்கை எட்டும் வரை இடைவிடாது இயங்கும் சாதனை தமிழன்"
பெற்ற ஒரு தமிழன் வேறு யாருமல்ல? அவுஸ்ரேலியாவின் முன்னோடி பணக்காரர்களில் ஒருவரான மகே சின்னத்தம்பி! அவர்கூட யாழ் வடமராட்சியை சேர்ந்தவரே.

இவரது தாய் தகப்பன் புலோலி, பருத்தித்துறையை சேர்ந்தவர்கள். மலேசியாவில் பிறந்து, ஆஸ்திரேலியாவில் கல்வி கற்று, அங்கேயே தொழில் தொடங்கி, தனது ஒரே கனவான மாபெரும் நகரைத் தனிமனிதனாக உருவாக்கி வரும் அந்த அதிசய மனிதர்..
உலகில் தனிநபர் ஒருவரால் உருவாகிக் கொண்டிருக்கும் ஆஸ்திரேலியாவின் மாபெரும் நகரங்களில் ஒன்றான Greater Springfield (www.greaterspringfield.com.au) என்னும் நகரை உருவாக்கி வரும் ஒரு தமிழரின் வாழ்க்கை விண்ணளவு உயர்ந்த வரலாறு அது.
1992ல் குறைவான முதலீட்டுடன் ஆனால் உறுதியான மனத்தோடு 2860 ஏக்கர் பரப்பளவு கொண்ட மிகச் சுமாரான நிலத்தை வாங்கிய அந்தத் தமிழர் அடுத்த 20 ஆண்டு காலத்தில் எண்ணிலடங்கா பின்னடைவுகள், ஏமாற்றங்கள் மற்றும் சவால்களைத் தாண்டி உலகமே வியக்கும் வண்ணம் இன்று மிகப் பெரிய நகரத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.
ஏழ்மை சூழ்ந்த பிறப்பிலிருந்து இந்த அளவிற்கு இவரை உயர்த்தியது சுவாமி விவேகானந்தரின் பத்துக் கட்டளைகளும் அதை கடைப்பிடிபதும்தான் என்கிறார்.
இவ்வாறானவர்களின் ஒத்துழைப்பை எமது தமிழ்த் தலைமைகளும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. இவர் ஒரு ஆசியாவை சேர்ந்தவர் என்பதை மோடி அறிந்துகொண்டபோதும் நமது தமிழ்த் தலைமைகள் அறிந்து கொண்டார்களா என்ற கேள்வியும் எழுகின்றது. இவருடனாவது தமது சொந்த அரசியலுக்காக அணுகாது பாதிக்கப்பட்ட தமிழனை தட்டிக்கொடுக்க நாடுங்கள்.

அவருடைய நேர்காணல்கள் உங்களுக்காக