Breaking News

வடக்கு,கிழக்கை இணைக்கமாட்டோம்- என்கிறது அரசாங்கம்

இலங்கை ஒற்றையாட்சி நாடாகவே இருக்கும் என்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படாது என்றும் இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தொலைக்காட்சி ஒன்றின் நேரடி விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட பிரதி அமைச்சர் அஜித் பெரேரா, “ மைத்திரிபால – ரணில் அரசாங்கம் எந்தக் சூழ்நிலையிலும், ஒற்றையாட்சி நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தாது.

அத்துடன் வடக்கு கிழக்கு மாகாணங்களை இணக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படமாட்டாது.” என்று தெரிவித்துள்ளார்.