இலங்கை – பாகிஸ்தான் அரசாங்கங்களுக்கிடையில் எட்டு உடன்படிக்கைகள் கைச்சாத்து
இலங்கை – பாகிஸ்தான் நாட்டு அரசாங்கங்களுக்கிடையில் எட்டு உடன்படிக்கைகள் இன்று கைச்சாத்திடப்பட்டன. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு கௌரவமளிக்கும் நிகழ்வு இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்தே இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகின. தகவல் தொழில்நுட்பம், சுகாதார மேற்பாடு, நிதி முகாமைத்துவம், கலாசார மேம்பாடு உட்பட்ட 8 உடன்படிக்கைகள் இன்றையதினம் கைச்சாத்திடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.








