உடனடியாக உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை நடத்தவும் – கபே கோரிக்கை
பொது மக்களின் நாளாந்த தேவைகளுக்கு அவசியமான பல உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகள் தோல்வியடைந்துள்ளதனால் நாட்டினுள் பயங்கர நிலை ஏற்பட்டுள்ளதாக கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவிக்கின்றார்.
நாட்டின் உள்ளூராட்சி மன்றங்கள் பல இவ்வாறு சட்டவிரோதமான முறையில் ஆணையாளர்களின் கீழ் இயங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.தற்போது பழுதான மின்குமிழ்களை மாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு உள்ளுராட்சி மன்றங்கள், ஆணையாளர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகளின் கீழ் இருப்பதனால் மக்கள் ஆணை புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.இதன் காரணமாக உடனடியாக உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை நடத்தி மக்களின் பிரதிநிதிகளை நியமிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.








