சுரேஷிடம் உடன் விசாரணை நடத்தப்பட வேண்டும் - சங்கரி கோரிக்கை
சுரேஷ் பிரேமசந்திரனின் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று, தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொது செயலாளர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வைத்து தமக்கு கிடைத்த வாக்குகள் மற்றுமொருவருக்கு மாற்றப்பட்டு, அவரை வெற்றிபெற செய்ததாக சுரேஷ் பிரேமசந்திரன் குற்றம் சுமத்தி இருந்தார். இந்த குற்றச்சாட்டை இலகுவானதாக கருதி விட்டுவிடக்கூடாது. இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இந்த குற்றச் செயலை மேற்கொண்டவர் யாராக இருந்தாலும் அவரை அடையாளம் கண்டு தண்டிக்க வேண்டும் என்று ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.








