Breaking News

மனித உரிமைகள் ஆணையாளருக்கு எதிராக சிங்களவர்கள் வழக்குத் தாக்கல்

ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தை மீறி செயற்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ரா-அத் அல் ஹுசைனுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய மனித உரிமைகள் நீதிமன்றத்தில், வெளிநாடு வாழ் சிங்கள மக்களால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்காக அவர், ஐ.நா சாசனத்தின் பிரிவு 13.2 மீறிச் செயற்பட்டுள்ளதாக அவருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.இந்த விடயம் தொடர்பில் மூன்று வெளிநாட்டு நீதிபதிகளுடன் கலந்துரையாடிய பின்னரே மனித உரிமைகள் ஆணையாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு புலம்பெயர்ந்த இலங்கை  மக்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மனித உரிமைகள் ஆணையாளருக்கு எதிராக ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் முதல் சந்தர்ப்பமாக இது அமையவுள்ளது.இந்த வழக்குத் தாக்கல் நடவடிக்கைக்கு கனடா, அவுஸ்திரேலியா, பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் வாழும் இலங்கை நாட்டு பிரஜைகள் ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.