Breaking News

தமிழர்களின் அபிலாசைகளை புதிய அரசியலமைப்பு நிறைவேற்ற வேண்டும் (படங்கள் இணைப்பு)

தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையிலேயே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் இன்று நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவையின் உத்தேச தீர்வுத்திட்ட வெளியீட்டு நிகழ்வு கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்துள்ள அவர், புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியல் அமைப்பில் தமிழர்களின் இனப்பிரச்சனை தொடர்பிலான தீர்வு திட்டம் உள்வாங்கப்பட வேண்டும்.

அத்துடன், புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் தமிழ் மக்கள் பேரவையினால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்வு திட்டம் தொடர்பில் நாம் துறைசார்கள் சந்திப்புகளை முன்னெடுக்கவுள்ள அதேவேளை, மக்கள் சந்திப்புகளையும் முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.