கதிர்காம கந்தனின் காலடியில் மஹிந்த
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கதிர்காமம் சென்ற மஹிந்த, கதிர்காமம் கிரிவெஹர விஹாரையில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர், நேற்று இரவு கதிர்காம கந்தனை தரிசித்தார்.
அங்கு சுமார் மூன்று மணித்தியாங்கள் வரை செலவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு, ஆலயத்திற்கு வருகைதந்த பக்தர்களுடன் இணைந்து மஹிந்த புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பல்வேறு ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்களில் சிக்கியுள்ள மஹிந்த குடும்பத்தார், பல்வேறு ஆலயங்களில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.