Breaking News

யாழ். மாணவர்களும் எதிர்காலத்தில் ஜனாதிபதியாகும் வாய்ப்பு - மைத்திரி நம்பிக்கை

யாழ்ப்பாண சாரண மாணவர்கள் ஒருவேளை எதிர்காலத்தில் இலங்கை ஜனாதிபதியாக தெரிவாக வாய்ப்பு உள்ளது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஒருவேளை பாடசாலை காலத்தில் சாரணராக இருந்த காரணத்தினால் தனக்கும் ஜனாதிபதியாகும் வாய்ப்பு கிடைத்திருக்கலாம் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஒன்பதாவது சாரண ஜம்போறி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் யாழ்ப்பாணத்தில் இன்று திங்கட்கிழமை ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி, துணைத் தூதுவர் நடராஜன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

இதன்போதே ஜனாதிபதி இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் முதற்முறையாக இடம்பெற்ற தேசிய சாரண ஜம்போறி நிகழ்வில் இந்தியா, நேபாளம், சீனா உள்ளிட்ட 8 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சாரணர்களும், அரச அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த நிலையில் யாழில் நடத்தப்பட்ட இந்நிகழ்வு அரசாங்கத்தின் நல்லிணக்க முயற்சிகளின் ஓர் எடுத்துக்காட்டாக உள்ளது என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.