Breaking News

பலாலி விமான நிலைய விரிவாக்கம் ஏன் அவசரப்படுகிறது இந்தியா? -சத்ரியன்

பலாலி விமான நிலை­யத்தை பிராந்­திய விமான
நிலை­ய­மாக விரி­வாக்கும் திட்­டத் தைச் செயற்­ப­டுத்­து­வதில், அர­சாங்கம் மட்­டு ­மன்றி இந்­தி­யாவும் கூட, அதி­க­ளவு ஆர்­வத் தைக் காட்­டு­கி­றது என்­பதைப் புரிந்து கொள்ள முடி­கி­றது.
இந்த விட­யத்தில் முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் எதிர்ப்புத் தெரி­வித்­தி­ருந்­தாலும், திட்டம் தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­படும் என்று கடந்­த­வாரம் ஆங்­கில வார­ இதழ் ஒன்­றுக்கு கூறி­யி­ருந்தார், பாது­காப்புச் செயலர் கரு­ணா­சேன ஹெற்­றி­யா­ராச்சி.

அவ­ரது இந்தக் கருத்து, வடக்கு மாகா­ணத் தில் மக்­களால் தெரிவு செய்­யப்­பட்ட ஒரு நிர்­வாக கட்­ட­மைப்பு இருக்­கின்ற போது, அதன் கருத்­துக்­களைப் புறக்­க­ணித்துச் செயற்­ப­டு­கின்ற முன்­னு­தா­ர­ண­மாக இந்த விவ­காரம் மாறி­விடும் சூழ­லையே பிர­தி­ப­லித்­தி­ருக்­கி­றது. விமான நிலை­யங்கள், துறை­மு­கங்கள் என்­பன மத்­திய அரசின் அதி­கார எல்­லைக் குள் தான் வரு­கின்­றன. எனவே, விமான நிலைய விரி­வாக்­கத்தில், மாகாண அரசின் அனு­ம­தியைப் பெற வேண்­டி­ய­தில்லை மத்­திய அர­சாங்­கமே முடி­வு­களை எடுக்­கலாம் என்­பது உண்மை தான்.

ஆனாலும், மத்­திய அர­சுடன் மாகாண அர­சாங்கம் இணைந்து பய­ணிக்க வேண்டும் என்று எதிர்­பார்க்­கின்ற இந்­தியா உள்­ளிட்ட சர்­வ­தேச சமூகம், இந்த விட­யத்தில் எதிர்­ம­றை­யாகச் சிந்­திக்கத் தலைப்­ப­டு­வது அபத்­த­மா­னது.
அண்­மையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் அலரி மாளி­கையில் நடத்­தப்­பட்ட வடக்கின் அபி­வி­ருத்தி தொடர்­பான கூட்­டத்தின் போதே, பலாலி விமான நிலைய விரி­வாக்கத் திட்­டத்­துக்கு, எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தார் முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன்.

முதலில் இடம்­பெ­யர்ந்த மக்­களை மீள்­கு­டி­யேற்றம் செய்ய வேண்டும் என்றும் அதற்குப் பின்­னரே விமான நிலைய அபி­வி­ருத்தி பற்றிச் சிந்­திக்க வேண்டும் என்றும், முத­ல­மைச்சர் தரப்பில் கூறப்­பட்­டி­ருந்­தது. இதற்குப் பின்னர் தான், பாது­காப்புச் செயலர் கரு­ணா­சேன ஹெட்டி­யா­ராச்சி, வடக்கின் முத­ல­மைச்சர் எதிர்ப்புத் தெரி­வித்­தாலும், இந்த திட்டம் முன்­னெ­டுக்­கப்­படும் என்று கூறி­யி­ருந்தார்.

அமைச்சர் டி.எம்.சுவா­மி­நா­தனும், கிட்­டத்­தட்ட இந்தத் திட்டம் கைவி­டப்­ப­டாது என்­பதை உறு­திப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார். எனினும், முத­ல­மைச்­சரின் கரி­ச­னைகள் கவ­னத்தில் கொள்­ளப்­படும் என்று அவர் கூறி­யி­ருக்­கிறார்.

பலாலி விமான நிலைய விரி­வாக்கம் என்­பது, தனியே அபி­வி­ருத்­தி­யுடன் தொடர்­பு­டைய விடயம் மட்­டு­மல்ல. அதனைச் சுற்­றி­யுள்ள பிர­தே­சத்தில் காலம்­கா­ல­மாக வாழ்ந்த ஆயி­ரக்­க­ணக்­கான குடும்­பங்­களின் வாழ்­வா­தா­ரத்­துடன் தொடர்­பு­டைய விவ­கா­ர­மா­கவும் உள்­ளது. அந்தப் பகு­தியில் வாழ்ந்த மக்­களை அகதி முகாம்­களில் குடி­ய­மர்த்தி விட்டு விமான நிலை­யத்தை அமைப்­பதன் மூலம் அபி­வி­ருத்­தியைப் பெற்று விட முடி­யுமா என்ற கேள்­வியே இப்­போது எழுப்­பப்­ப­டு­கி­றது.

அதை­விட, விமான நிலைய விரி­வாக்கத் திட்­டத்­துக்கு முத­ல­மைச்சர் மட்­டு­மன்றி, அனைத் துக் கட்­சி­களின் பாரா­ளு­மன்ற, மாகா­ண­சபை உறுப்­பி­னர்­க­ளுமே எதிர்ப்பை வெளி­யிட்­டுள்­ளனர். ஒட்­டு­மொத்த சமூ­கமும் இந்த திட்­டத்தை எதிர்த்து நிற்­கின்ற ஒரு சூழலில் தான் அத னைப் புறக்­க­ணித்துக் கொண்டு, பலாலி விமான நிலைய விரிவாக்கத் திட்­டத்தைத் தொடரும் எத்­த­னிப்பில் அர­சாங்கம் இறங்­கி­யுள்­ளது.

இந்த திட்­டத்தை மேற்­கொள்­வதில் இந்­திய அர­சாங்­கமும் தொடர்­பு­பட்­டுள்­ளது, இந்த விவ­கா­ரத்தை இன்னும் சிக்­க­லா­ன­தாக மாற்­றி­யி­ருக்­கி­றது. இந்­தியா இந்த விட­யத்தில் தொடர்­பு­பட்­டி­ருப்­பதால், இலங்கை அர­சாங்­கத்தின் நிலை பல­மாக இருக்­கி­றது என்­பது உண்­மையே. இந்­தியா இந்த விமான நிலைய விரி­வாக்கத் திட்­டத்தை தனது வர்த்­தக மற்றும் பாது­காப்பு நலன்­க­ளுக்­காகப் பயன்­ப­டுத்திக் கொள்­ளவே முற்­ப­டு­கி­றது என்­பதை உணர்ந்து கொள்ள முடி­கி­றது. 

அண்­மையில் இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் கொழும்பு வந்­தி­ருந்த போதே இதற்­கான இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டி­ருந்­தது. பலாலி விமான நிலை­யத்தை பிராந்­திய விமான நிலை­ய­மாக விரி­வாக்கம் செய்­வதன் மூலம், தென்­னிந்­திய நக­ரங்­க­ளுக்­கான விமான சேவை­களை மேற்­கொள்­ளலாம் என்­பதே இரு நாட்டு அர­சாங்­கங்­க­ளி­னதும் திட்டம். 

தென்­னிந்­திய நக­ரங்­க­ளுக்கு விமான சேவை களை விரி­வாக்­கு­வதன் மூலம், சுற்­றுலாப் பய­ணி­களை அதி­க­ளவில் ஈர்க்­கலாம் என்றும் வர்த்­தக தொடர்­புகள் அதி­க­ரிக்கும் என்றும் இந்­தியா எதிர்­பார்க்­கி­றது. அதை­விட, பலாலி விமான நிலை­யத்தை எந்­த­வொரு அவ­சர தேவைக்கும் பயன்­ப­டுத்தக் கூடி­ய­தான தயார் நிலையில் வைத்­தி­ருப்­ப­தற்கும் இந்­தியா விரும்­பு­கி­றது.

ஏற்­க­னவே, சந்­தி­ரிகா குமா­ர­துங்க ஆட்­சி யில் இருந்த கால­கட்­டத்­திலும், பலாலி விமான நிலை­யத்தின் ஓடு­பா­தை­களை தர­மு­யர்த்திக் கொடுத்­தி­ருந்­தது இந்­தியா. இப்­போது அதன் அடுத்­த­கட்­ட­மாக, இரா­ணுவ விமான நிலை­ய­மாக உள்ள பலாலி விமான நிலை­யத்தை சிவில் விமான நிலை­யமாக மாற்ற- அதன் செயற்­பா­டு­களை விரி­வாக்­கு­வ­தற்­கான உத­வியை இந்­தி­யாவே வழங்கப் போகி­றது.

இது­கு­றித்து ஆராய்­வ­தற்கு இந்­திய விமா­னப்­படை அதி­கா­ரிகள் குழு­வொன்றும் விரை வில் யாழ்ப்­பாணம் செல்­ல­வுள்­ளது. இப்­ப­டி­யான சூழ்­நி­லையில் தான் வடக்கு மாகா­ண­ச­பை­யிடம் இருந்தும் தமிழ் மக்­க­ளிடம் இருந்தும் இந்த திட்­டத்­துக்கு எதிர்ப்புக் கிளம்­பி­யி­ருக்­கி­றது. ஆனால், இந்­தி­யாவோ இலங்­கையோ இந்த எதிர்ப்பை எந்­த­ள­வுக்கு கவ­னத்தில் கொண்டு செயற்­படப் போகின்­றன என்­பது கேள்­விக்­கு­ரிய விடயம்.

ஏனென்றால், இரண்டு நாடு­களின் அர­சாங்­கங்­க­ளுக்கும் இந்த திட்டம் தேவை­யாக உள்­ளது. இந்தக் கட்­டத்தில் தமிழ் மக்­களின் எதிர்ப்­பையோ, தமிழ் மக்­களால் தெரிவு செய்­யப்­பட்ட மாகா­ண­ச­பையின் எதிர்ப்­பையோ கண்­டு­கொள்ளும் நிலையில் இரு­நா­டு­களும் இல் லைப் போலவே தெரி­கி­றது.

பலாலி விமான நிலை­யத்தை விரி­வாக்கி, வர்த்­தகத் தொடர்­பு­களை ஏற்­ப­டுத்த முனையும் இந்­தியா, ஏன் இன்­னமும் கப்­பல்­வழிப் போக்­கு­வ­ரத்தை மீள ஆரம்­பிப்­ப­தற்கு முயற்­சி­களை மேற்­கொள்­ளாமல் இருக்­கி­றது? கடந்த ஆண்டு மார்ச் மாதம், இந்­தியப் பி்ரதமர் நரேந்­திர மோடி இலங்கை வந்­தி­ருந்த கால­கட்­டத்தில், தலை­மன்னார் – தூத்­துக்­குடி கப்பல் சேவையை மீண்டும் ஆரம்­பிப்­பது குறித்த உடன்­பாடு ஒன்றைக் கையெ­ழுத்­திட புது­டில்லி அவ­ச­ர­மாக அழுத்தம் கொடுத்­தது.

ஆனால், தலை­மன்னார் இறங்­கு­து­றையில் போதிய வச­திகள் இல்லை என்றும், அங்கு தேவை­யான உட்­கட்­ட­மைப்பு வச­தி­களை செய்த பின்னர் குறு­கிய காலத்தில் பய­ணிகள் கப்பல் சேவையை ஆரம்­பிக்­கலாம் என்றும் இலங்கை அர­சாங்கம் கூறி­யது. பய­ணிகள் கப்பல் சேவையை விரைவில் ஆரம்­பிப்­ப­தாக நரேந்­தி­ர­மோ­டியின் பய­ணத்தின் போது இணக்­கப்­பாடு காணப்­பட்­டது.

இந்த இணக்­கப்­பாடு ஏற்­பட்டு ஒரு­வ­ரு­ட­மா­கி­யுள்ள நிலை­யிலும் கூட, தலை­மன்னார்- தூத்­துக்­குடி கப்பல் சேவையை ஆரம்­பிக்க இன்­னமும் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை. அதற்கு அவ­சரம் காட்­டாத இந்­தியா, பலாலி விமான நிலைய விரி­வாக்­கத்தில் மட்டும் கூடுதல் அக்­கறை கொள்­வது கேள்­வி­களை எழுப்ப வைக்­கி­றது.

தமிழ் மக்­களின் நலன்­களைப் புறக்­க­ணித்து இந்­தியா இந்த விட­யத்தில் தனது நலனை முன்­னி­லைப்­ப­டுத்த முனை­கி­றதா என்ற சந்­தே­கங்­களும் எழு­கி­றது.
இந்த விட­யத்தில் இந்­தியா எடுக்கும் முடிவு முக்­கி­ய­மா­ன­தாக பார்க்­கப்­படும்.
ஏனென்றால், இலங்­கையில் தமிழ் மக்­களின் பிரச்­சி­னைக்குத் தீர்வு காண்­ப­தற்­கா­கவே இந்­தியா மாகா­ண­சபை முறையை 13ஆவது திருத்­தத்தின் மூலம் உரு­வாக்கிக் கொடுத்­தது.

இன்­னமும் கூட, இனப்­பி­ரச்­சினைத் தீர்­வுக்­கான அதி­கா­ரப்­ப­கிர்வு 13ஆவது திருத்­தச்­சட்­டத்தை அடிப்படையாக கொண்டதாக இருக்க வேண்டும் என்றே இந்தியா கூறி வருகிறது. அவ்வாறு உருவாக்கப்பட்ட வடக்கு மாகாணசபையின் கருத்துக்களை புறக்கணித்து இந்தியா இந்த திட்டத்தை முன்னெடுக்க முனைந்தால், அது 13ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடான அதிகாரப் பகிர்வையும் கேள்விக்குள்ளாக்கும்.

அபிவிருத்தி சார்ந்த விடயங்களில் மத்திய அரசுடன் இணைந்து மாகாணசபை செயற்பட வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் எதிர்பார்ப்பதன் பின்னணி, இதுபோன்ற சிக்கலைக் கையாள்வதற்கான உத்தியா என்றும் கூடச் சந்தேகிக்க வேண்டியுள்ளது. பலாலி விமான நிலைய விரிவாக்கம் என்பது ஆயிரக்கணக்கான தமிழர்களின் வாழ்வாதாரத்தின் மீது தான் கட்டியெழுப்பப்படும் என்றால், அந்த திட்டத்தை தோற்கடிக்கும் வழிமுறைகள் பற்றியும் தமிழ் மக்கள் சிந்திக்க முற்படுவதில் தவறில்லை.