Breaking News

அரசியல் சீர்த்திருத்தம் – வவுனியாவில் மக்கள் கருத்தறியும் நிகழ்வு

அரசாங்கத்தினால் ஏற்பபடுத்தவுள்ள புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் மக்கள் கருத்தறியும் நிகழ்வு வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுள்ளது.

புதிய அரசாங்கம் தற்போது புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் ஒன்றினை கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், அது குறித்து மக்கள் கருத்துக்களை அறியும் வகையில் ஓரு குழு நியமிக்கப்பட்டு மாவட்ட மட்டத்தில் கருத்துக்கள் பெறப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு கட்டமாக வவுனியா மாவட்ட செயலகத்தில் மக்கள் கருத்தறியும் நிகழ்வு இடம்பெற்றது.

அக் குழுவைச் சேர்ந்த சீ.இளங்கோவன், எஸ்.தவராசா, எஸ்.விஜசங்கர், ஜே.குரிஸ், என்.செல்வகுமாரன், நதீஸ்கர் ஆகியோர் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்து மக்கள் கருத்துக்களை பெற்றனர்.மக்கள் கருத்தறியும் நிகழ்வு நாளை சனிக்கிழமையும் வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.