Breaking News

மறைத்த விட­யங்­க­ளை நேர­டி­யாக பார்க்­க­லாம்! அல்–­ஹு­சைனின் விஜயம் குறித்து அர­சாங்கம் கருத்­து

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணை­யாளர் செயிட் அல் ஹுசைனின் வடக்கு விஜ­யத்தின் போது தற்­போ­தைய நல்­லாட்­சியின் உண்மை நிலை­மை­களை அவரால் உணர முடியும் என நம்­பு­கின்றோம். , கடந்த கால ஆட்­சி­யா­ளர்கள் மறைத்த பல யதார்த்­த­பூர்­வ­மான விட­யங்­களை அவரால் உண­ர­மு­டியும் என அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் சுகா­தார அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.

அவ­ரது வரு­கை­யா­னது இலங்­கையின் உள்­ளக விசா­ரணை பொறி­மு­றையை மேலும் பலப்­ப­டுத்­து­வ­துடன் சர்­வ­தேச ஒத்­து­ழைப்பை உறு­திப்­ப­டுத்தும் வகையில் அமையும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணை­யாளர் செயிட் அல் ஹுசைன் இன்று இலங்கை வரு­வ­துடன் அர­ச­த­ரப்பு மற்றும் தமிழர் தரப்பை சந்­திக்­க­வுள்ளார். இது தொடர்பில் ஊடகம் ஒன்றுக்க கருத்து தொரிவிக்கும்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்,

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணை­யாளர் செயிட் அல் ஹுசைன் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொள்­வது வர­வேற்­கத்­தக்க விட­ய­மாகும். அவரின் வரு­கையை இலங்கை அர­சாங்கம் வர­வேற்­கின்­றது . குறிப்­பாக இலங்கை அர­சாங்­கத்தின் அழைப்பின் பேரி­லேயே அவர் இலங்­கைக்கு வருகை தரு­கின்றார். அதேபோல் இந்த நல்­லாட்சி அர­சாங்கம் எவ்­வா­றான செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­துள்­ளது என்­பதை அவர் நேர­டி­யாக பார்­வை­யி­டு­வதை நல்­ல­தொரு விட­ய­மா­கவே கரு­து­கிறோம். அவ­ரது விஜயம் தொடர்பில் அனைத்து தரப்பு பாது­காப்பு மற்றும் ஏனைய ஏற்­பா­டு­களை அர­சாங்கம் பூர்த்­தி­செய்­துள்­ளது.

அதேபோல் வடக்கு விஜ­யத்தின் போது தற்­போ­தைய நல்­லாட்­சியின் நிலை­மை­களை அவரால் உணர முடியும் என நாம் நம்­பு­கிறோம் . வெறு­மனே அபி­வி­ருத்­தி­களை மாத்­திரம் காட்­டி­விட்டு ஏமாற்­றாது கடந்த கால ஆட்­சி­யா­ளர்கள் மறைத்த பல யதார்த்­த­பூர்­வ­மான விட­யங்­களை அவரால் இம்­முறை பார்­வை­யிட முடியும்.

வடக்கின் பாது­காப்பு நிலை­மைகள் தொடர்­பிலும் அவரால் தெளி­வான நிலைப்­பாட்டை எட்ட முடியும் என நம்­பு­கின்றோம்.

எனினும் இப்­போது அவ­ரது வரு­கை­யா­னது இலங்­கையின் உள்­ளக விசா­ரணை பொறி­மு­றையை தவிர்த்து சர்­வ­தேச விசா­ர­ணையை பலப்­ப­டுத்தும் வகை­யிலும், எமது இரா­ணுவ வீரர்­களை தண்­டிக்கும் வகை­யிலும் அமைந்­துள்­ள­தாக தெரி­விக்­கின்­றனர்.

ஆனால் இந்த கருத்­துக்­களில் எந்த உண்­மையும் இல்லை. அவரின் வருகை அழுத்தம் கொடுக்கும் வகையில் அமை­ய­வில்லை. அதேபோல் இலங்­கையின் உள்­ளக பொறி­மு­றையை பலப்­ப­டுத்தி அதற்­கான சர்­வ­தேச ஒத்­து­ழைப்­பு­களை வழங்கும் வகையில் தான் அவரின் வருகை அமைந்­துள்­ளது.

மேலும் இலங்கை உள்­ளக விசா­ரணை பொறி­மு­றை­களை கையாண்­டாலும் எமக்கு சர்­வ­தேச ஒத்­து­ழைப்பு அவ­சி­ய­மா­கின்­றது. சர்­வ­தே­சத்தை திருப்­திப்­ப­டுத்­தவும் இலங்கை இரா­ணு­வத்தின் மீதான அவப்­பெ­யரை நீக்­கவும் எமக்கு கிடைத்­துள்ள இறுதி சந்­தர்ப்பம் இது­வாகும். ஆகவே இந்த சந்­தர்ப்­பத்தை நாம் தவ­ற­வி­டாது சரி­யாக பயன்­ப­டுத்­திக்­கொள்ள வேண்டும். அதற்­கான ஒரு முயற்­சி­யாக இதை பயன்­ப­டுத்த அர­சாங்கம் முயற்­சிக்கும்.

மேலும் இரா­ணுவம் வசம் உள்ள காணி­களை விடு­வித்­துள்­ளமை, மீள்­கு­டி­யேற்ற நட­வ­டிக்­கைகள் மற்றும் அர­சியல் அமைப்பு ரீதியில் அர­சியல் பிரச்­சி­னைக்­கான தீர்வு என்ற விட­யங்கள். என்­பன தொடர்பில் ஜனா­தி­பதி , பிர­தமர் மற்றும் அர­ச­த­ரப்பு சந்­திப்­பின்­போது கலந்­தா­லோ­சிக்­கப்­படும்.

அதேபோல் காணா­மல்­போனோர் மற்றும் பாதிக்­கப்­பட்டோர் தொடர்­பிலும் அதிக முக்­கி­யத்­துவம் கொடுத்து எதிர்­கா­லத்தில் இந்த பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணும் வகையில் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்போம்.

தமிழ் மக்­களின் நீண்­ட­கால பிரச்­சி­னைகள் என்­ன­வென்­பது நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு நன்­றா­கவே தெரியும். அவர்­களின் இடங்கள் அப­க­ரித்­தமை, சட்­ட­வி­ரோ­த­மாக அல்­லது அநா­வ­சி­ய­மாக கைது செய்தல், அவர்­களின் உரி­மை­களை பெற்­றுக்­கொள்­வதில் உள்ள தடைகள் என்­ப­ன­வற்­றையே தமிழ் மக்கள் நீண்­ட­கால பிரச்­சி­னை­க­ளாக அனு­ப­வித்து வரு­கின்­றனர். இந்த விட­யங்­களை கடந்த காலத்தில் அர­சாங்கம் சரி­யாக செய்து கொடுக்­காத கார­ணத்­தினால் தான் சர்­வ­தேச தரப்பின் மீது நம்­பிக்கை கொண்டு செயற்­பட்டு வரு­கின்­றனர். இதில் குறை­கூறும் வகையில் எதுவும் இல்லை.

அதேபோல் போர்க்­குற்ற விசா­ர­ணைகள் தொடர்பில் நீதி­மன்ற சுயா­தீன செயற்பாடுகளுக்கென விசேட சட்டமூலம் ஒன்றையும் இந்த ஆண்டு நடுப்பகுதிக்குள் கொண்டுவர தீர்மானித்துள்ளோம். ஆகவே போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் அரசாங்கம் தெளிவாக தமது நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றது.

அரசியல் பிரச்சினை மற்றும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் புதிய அரசியல் அமைப்பு அமையும். நீண்டகால பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் உள்ளோம் என்றார்.