Breaking News

ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை – பயத்தில் பின்வாங்கிய கம்மன்பில

இலங்கையின் தேசிய கீதத்தை தமிழில் பாடினால், ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வருவதாக கூறிய, இனவாத நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, தனது தீர்மானத்தை கைவிட்டுள்ளார்.

தமிழில் தேசிய கீதம் பாடுவது அரசியலமைப்புக்கு முரணானது என்பதால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படும் என கம்மன்பில கூறியிருந்தார்.

தீர்மானத்தை கைவிட்டமை குறித்து கருத்து வெளியிட்டுள்ள கம்மன்பில,

சிறப்புரிமைகளை பெறும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் காரணமாக , நாடாளுமன்ற செயற்பாடுகளில் சிக்கல்கள் காரணமாகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு அடிப்படையை ஏற்படுத்த முடியாது.

எனினும் அடுத்த ஆண்டு தேசிய கீதத்தை தமிழில் பாட நடவடிக்கை எடுத்தால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கம்மன்பில கூறியுள்ளார்.