அல் ஹூஸைன் இலங்கையை வந்தடைந்தார்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் செய்யித் ராத் அல் ஹூஸைன் இன்று(சனிக்கிழமை) காலை 8.30 மணியளவில் இலங்கையை வந்தடைந்துள்ளார்.
இலங்கையை வந்தடைந்துள்ள மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் செய்யித் ராத் அல் ஹூஸைன் எதிர்வரும் 10ம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இலங்கை அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பினை ஏற்றே அவர் இன்று இலங்கை வருகை தந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
செய்யித் ராத் அல் ஹூஸைனின் இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட அரச தலைவர்கள் பலருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன் நாளை மற்றும் நாளை மறுதினம் அவர் யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களின் பல பிரதேசங்களுக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.








