Breaking News

நல்லிணக்க விவகாரங்கள் குறித்து சந்திரிகா- சுஸ்மா இடையே பேச்சு

இரண்டு நாள் பயணமாக இலங்கை வந்துள்ள, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், இன்று முற்பகல் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இந்தச் சந்திப்பு, சந்திரிகா குமாரதுங்கவில் இல்லத்தில் நடைபெற்றது.இலங்கையில் நல்லிணக்க நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான பணியத்தின் தலைவராக சந்திரிகா குமாரதுங்க பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், இலங்கையில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் தொடர்பாகவே சந்திரிகா குமாரதுங்கவும், சுஸ்மா சுவராஜும் பேச்சுக்களை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இவர்கள் இருவரும், நீண்டகால நண்பர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.