Breaking News

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையாளர் இலங்கை வருகிறார்

அனைத்துலக ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்திக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையாளர் நிவென் மிமிகா அடுத்தவாரம் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

மூன்று நாள் பயணமாக அவர், வரும் மார்ச் 15ஆம் நாள் இலங்கை வரவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையாளர் நிவென் மிமிகா இலங்கையில் தங்கியிருக்கும் போது, அரசாங்க அதிகாரிகள் மற்றும் சிவில் சமூக குழுக்களையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தினால் அபிவிருத்திக்காக வழங்கப்படும் உதவிகளுக்குப் பொறுப்பானவராக, நிவென் மிமிகா இருப்பது குறிப்பிடத்தக்கது.இலங்கையில் போருக்குப் பிந்திய மீள்கட்டமைப்பு மற்றும் அபிவிருத்திக்கு உதவுவது தொடர்பாக ஆராயவே அவர் இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.