எந்த எதிர்ப்பு வந்தாலும் 17 ஆம் திகதி கலந்துகொள்வோம்- மஹிந்த குழு
கூட்டு எதிர்க் கட்சியில் பங்கெடுக்கும் சகல ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்வரும் 17 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள “மக்கள் போராட்டம்” எனும் அரசாங்க எதிர்ப்புக் கூட்டத்தில் எந்த எதிர்ப்பு வந்தாலும் கலந்துகொள்வார்கள் என கூட்டு எதிர்க் கட்சியின் ஏற்பாட்டாளர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமன்றி, ஸ்ரீ .ல.சு.கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண, உள்ளுராட்சி சபை உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
கூட்டு எதிர்க் கட்சி இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாகவும், இதில் கலந்துகொள்வதற்கு மாவட்ட மட்டத்தில் தேவையான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.








