Breaking News

ஓயாத அலைகள் தாக்குதல் - எதிரி விடுதலை

ஆனை­யி­றவு இரா­ணுவ முகாம் மீது ஓயாத அலைகள் 3 அணி­களில் இணைந்து தாக்­குதல் நடத்­தி­ய­தாகக் குற்றம் சுமத்­தப்­பட்ட வழக்கில் எதி­ரி­யான விடு­த­லைப்­பு­லிகள் அமைப்பின் புல­னாய்வு பிரிவைச் சேர்ந்த புன்­குயில் எனப்­படும் பெர்­னாண்டோ எமில்தாஸ் (36) என்­ப­வரை யாழ் மேல் நீதி­மன்ற நீதி­பதி இளஞ்­செ­ழியன் வியா­ழன்று விடு­தலை செய்­துள்ளார்.

இந்த வழக்கில் ஒரே­யொரு சாட்­சி­ய­மாக முன்­வைக்­கப்­பட்­டி­ருந்து எதி­ரியின் குற்ற ஒப்­புதல் வாக்­கு­மூ­லத்தின் உண்மைத் தன்மை வழக்குத் தொடு­ந­ரினால் நியா­ய­மான சந்­தே­கத்­திற்கு அப்பால் நிரூ­பிக்­கப்­ப­ட­வில்லை என சுட்­டிக்­காட்டி எதி­ரியை விடு­தலை செய்து தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

நாக­மணி தெய்­வேந்­திரன் என்­ப­வ­ருக்கு எதி­ராக சட்­டமா அதி­ப­ரினால் தாக்கல் செய்­யப்­பட்ட வழக்கு ஒன்றில் நீதி­ய­ர­சர்­க­ளான சி.வி.விக்­னேஸ்­வரன், அமீர் இஸ்­மாயில், மார்க் பெர்­னாண்டோ ஆகியோர் அடங்­கிய உச்ச நீதி­மன்ற நீதி­ய­ரசர் குழா­மினால் அளிக்­கப்­பட்ட தீர்ப்பை மேற்­கோள்­காட்டி, நீதி­பதி இளஞ்­செ­ழியன் இந்தத் தீர்ப்பை வழங்­கி­யுள்ளார்.

விடு­த­லைப்­பு­லிகள் அமைப்பின் புல­னாய்வு பிரிவைச் சேந்­த­வ­ரா­கவும், ஓயாத அலைகள் 3 தாக்­குதல் அணி­யொன்றில் இர­ணந்­தி­ருந்­த­வ­ரு­மா­கிய புன்­குயில் என அழைக்­கப்­பட்ட பெர்­னாண்டோ எமில்தாஸ் என்­ப­வ­ருக்கு எதி­ராக, கடந்த 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22, 23 ஆம் திக­தி­களில் ஆனை­யி­றவு இரா­ணுவ முகாம் மீது தாக்­குதல் நடத்­தி­ய­தாகக் குற்றம் சுமத்தி, சடட்­டமா அதிபர் யாழ்ப்­பாணம் மேல் நீதி­மன்­றத்தில் வழக்கு தாக்கல் செய்­தி­ருந்தார்.

எதி­ரி­யினால் வழங்­கப்­பட்­ட­தாகத் தெரி­விக்­கப்­பட்ட குற்ற ஒப்­புதல் வாக்­கு­மூலம் மட்­டுமே, எதி­ரிக்கு எதி­ரான ஒரே­யொரு சாட்­சி­ய­மாக முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தது. இந்த குற்ற ஒப்­புதல் வாக்­கு­மூ­லத்தை இந்த வழக்கில் அனு­ம­திக்­கக்­கூ­டிய சான்று என ஏற்­க­னவே யாழ்ப்­பாணம் மேல் நீதி­மன்­றினால் இடைக்­காலத் தீர்ப்­ப­ளிக்­கப்பட்;டிருந்­தது.

இந்த வழக்கு நீதி­பதி இளஞ்­செ­ழியன் முன்­னி­லையில் எடுத்துக் கொள்­ளப்­பட்­ட­போது, குற்ற ஒப்­புதல் வாக்­கு­மூ­லத்தின் உண்மைத் தன்மை விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டது.

விசா­ர­ணையின் முடிவில் நீதி­பதி இளஞ்­செ­ழியன் தனது தீர்ப்பில் தெரி­வித்­த­தா­வது:

இந்த வழக்கின் எதிரி விடு­த­லை­ப­புலி உறப்­பி­னராம். அவர் ஓயாத அலைகள் தாக்­குதல் அணியில் இடம்­பெற்­றி­ருந்­தாராம். ஏதிரி ஆனை­யி­றவு இரா­ணுவ முகாம் மீதான தாக்­கு­தலில் ஈடு­பட்­டாராம் என தெரி­விக்­கப்­பட்ட போதிலும், இந்த விட­யங்கள் சம்­பந்­த­மாக எது­வி­த­மான புல­னாய்வு விசா­ர­ணை­களும் நடை­பெ­ற­வில்லை. அத்­த­கைய விசா­ணைகள் நடத்­தப்­பட்­ட­தாக நீதி­மன்­றத்தில் தெரி­விக்­கப்­ப­ட­வில்லை.

வவு­னியா கூமாங்­கு­ளத்தில் வைத்து எதி­ரியை கடந்த 2011 ஆம் ஆண்டு, ஒக்­டோபர் மாதம் 21 ஆம் திகதி பயங்­க­ர­வாதத் தடுப்புப் பிரிவு இன்ஸ்­பெக்டர் ஆப்தீன் கைது செய்­தி­ருந்தார்.

பயங்­க­ர­வாதத் தடுப்பப் பிரிவின் கொழும்பு தலை­மை­ய­லு­வ­லக பெண் உதவிப் பொலிஸ் அத்­தி­யட்­சகர் பத்­மினி என்­ப­வரால், 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதி குற்ற ஒப்­புதல் வாக்­கு­மூலம் பதிவு செய்­யப்­பட்­டது.

குற்ற ஒப்­புதல் வாக்­கு­மூலம் பதிவு செய்­யப்­பட்ட தினத்தில் இருந்து 13 வரு­டங்­க­ளுக்கு முன்னார், 2000 ஆம் ஆண்டு, விடு­த­லைப்­பு­லி­களின் ஓயாத அலைகள் தாக்­குதல் அணியில் இணைந்­தி­ருந்த எதிரி, ஆனை­யி­றவு இரா­ணுவ முகாமைத் தாக்­கி­ய­தாக இந்த குற்ற ஒப்­புதல் வாக்­கு­மூ­லத்தில் பதிவு செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றது.

இந்த வழக்கில் எதி­ரிக்கு எதி­ராக சுமத்­தப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் அவரைக் கைது செய்த இன்ஸ்­பெக்டர் ஆப்தீன் மேல­திக புல­னாய்வு விசா­ர­ணைகள் எத­னையும் நடத்­த­வில்லை.

குற்ற ஒப்­புதல் வாக்­கு­மூ­லத்தைப் பதிவு செய்த பெண் உதவிப் பொலிஸ் அத்­தி­யட்­சகர் பத்­மினி குற்ற ஒப்­புதல் வாக்­கு­மூ­லத்தைப் பதிவு செய்­ததைத் தவிர, எது­வி­த­மான புல­னாய்­விலும் அவரும் ஈடு­ப­ட­வில்லை

இந்த வழக்கில் கூறப்­பட்­டி­ருப்­பது போன்று உண்­மை­யி­லேயே 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22, 23 ஆம் திக­தி­களில் ஆனை­யி­றவு இரா­ணுவ முகாம் மீது தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டன என்­ப­தற்­கு­ரிய பயங்­க­ர­வாதப் புல­னாய்வு பிரிவின் புல­னாய்வு விசா­ரணை சான்­றுகள் எதுவும் நீதி­மன்­றத்தில் முன்­வைக்­கப்­ப­ட­வில்லை.

இந்த வழக்கின் குற்­றச்­சாட்டில் குறிப்­பி­டப்­பட்­டி­ருப்­பது போன்று 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் 22, 23 ஆம் திக­திளில் ஆனை­யி­றவு இரா­ணுவ முகாம் மீது நடத்­தப்­பட்ட தாக்­கு­த­லினால் ஏற்பட்;ட சேதம் என்ன, எத்­தனை இரா­ணுவ வீரர்கள் இறந்­தார்கள், எத்­தனை இரா­ணுவ வீரர்கள் காய­ம­டைந்­தார்கள் என்­ப­தற்கு ஒரு அறிக்­கை­கூட பொலி­சா­ரினால் நீதி­மன்­றத்தில் தாக்கல் சயெ;யப்­ப­ட­வில்லை.

இந்த வழக்கில் குறிப்­பிட்­டி­ருப்­பது போன்று, ஆனை­யி­றவு இரா­ணுவ முகாம் தாக்­கப்­பட்­டது சம்­பந்­த­மாக பாது­காப்பு அமைச்­சி­னால்­கூட, எது­வி­த­மான அறிக்­கை­களும் நீதி­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வில்லை.

விடு­த­லைப்­பு­லி­களின் ஓயாத அலைகள் 3 தாக்­குதல் அணி­யினர் 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் 22, 23 ஆம் திக­தி­க­ளில்தான் ஆனை­யி­றவு முகாமைத் தாக்­கி­னார்­களா என்­ப­தற்கும் எந்­த­வி­த­மான சான்றும் நீதி­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வில்லை.

இந்த வழக்கில் எதி­ரி­யாக நீதி­மன்­றத்தில் நிறுத்­தப்­பட்­டுள்­ளவர் வழங்­கி­ய­தாகக் கூறப்­படும் குற்ற ஒப்­புதல் வாக்­கு­மூலம் உண்­மை­யான தக­வல்­களைக் கொண்­டுள்­ளதா என்­ப­தைக்­சு­கூட பயங்­க­ர­வாதத் தடுப்புப் பிரிவு புல­னாய்வு செய்து சாட்­சி­யங்­களைத் தேட­வில்லை.

எனவே, விடு­த­லைப்­பு­லி­களின் ஓயாத அலைகள் தாக்­குதல் அணியில் இணைந்­தி­ருந்த எதிரி, 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22, 23 ஆகிய இரண்டு தினங்­களில் ஆனை­யி­றவு இரா­ணுவ முகாமைத் தாக்­கினார் என்றோ அல்­லது இரா­ணுவ முகாம் தாக்­கு­த­லுக்கு உள்­ளாக்­கப்­பட்­டது என்றோ இந்த நீதி­மன்­றத்தைத் திருப்­திப்­ப­டுத்­தக்­கூ­டிய, சுதந்­தி­ர­மான எந்த சாட்­சி­யங்கள் எதுவும் வழக்குத் தொடு­ந­ரினால் முன்­வைக்­கப்­ப­ட­வில்லை.

இதே­போன்று குற்ற ஒப்­புதல் வாக்­கு­மூ­லத்தை சாட்­சி­ய­மாகக் கொண்டு இலங்கை உயர் நீதி­மன்­றத்தில் நாக­மணி தெய்­வேந்­திரன் என்­ப­வ­ருக்கு எதி­ராக சட்­டமா அதி­ப­ரினால் தாக்கல் செய்­யப்பட்;ட பிர­சித்தி பெற்ற வழக்கில் நீதி­ய­ர­சர்­க­ளான சி.வி.விக்­னேஸ்­வரன், அமீர் இஸ்­மாயில், மார்க் பெர்­னாண்டோ ஆகிய நீதி­யசர் குழா­மினால் வழங்­கப்­பட்ட தீர்ப்பை நீதி­மன்றம் இந்த வழக்கில் மேற்கோள் காட்­டு­கின்­றது.

நாக­மணி தெய்­வேந்­திரன் வழக்கில் தீர்ப்­ப­ளித்­துள்ள நீதி­ய­ர­சர்கள் மூவரும், குற்ற ஒப்­புதல் வாக்­கு­மூ­ல­மா­னது, சுயா­தீ­ன­மா­ன­தாக இருக்க வேண்டும். குற்றச் செயல் உண்­மை­யாக நடந்­த­தாக இருக்க வேண்டும். வேறு சான்­றுகள் மூலம் சம்­பந்­தப்­பட்ட குற்ற ஒப்­புதல் வாக்­மூலம் ஒப்புறுதி செய்யப்பட வேண்டும். இந்த விடயங்கள் நியாயமான சந்தகத்திற்கப்பால் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர். 

எனவே, இந்த வழக்கில் எதிரி 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் 22, 23 ஆம் திகதிகளில் ஆனையிறவு இராணுவ முகாமைத் தாக்கினார் என்பதை வழக்குத் தொடுனர் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கத் தவறியிருப்பதனால் எதிரியை இந்த நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளிக்கின்றது என்றார் நீதிபதி இளஞ்செழியன்.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டிருந்த கடைசி வழக்கும் இத்துடன் முடிவடைந்துள்ளாக நீதிபதி இளஞ்செழியன் இந்த வழக்கின் முடிவில் தீர்ப்பளித்ததன் பின்னர் தெரிவித்துள்ளார்.