Breaking News

மஹிந்த தோற்கடிக்கப்பட்டமை நல்லதுக்கே – சொல்ஹேய்ம்

மஹிந்த ராஜபக்ஷ கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டமை நல்லதொரு திருப்புமுனை என முன்னாள் நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹேய்ம் தமிழ் நாட்டில் வைத்து கருத்துத் தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களின் நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கான சிறந்ததொரு சந்தர்ப்பம் தற்பொழுது உருவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வேலுப்பிள்ளை பிரபாகரன் யுத்தத்தின் மீது வைத்த நம்பிக்கை பிரயோசனமற்ற ஒன்றாகும். இவரிடம் மனிதப் படுகொலைகளை நிறுத்துமாறு பல தடவைகள் எடுத்துக் கூறியும், அவர் செவிசாய்க்க வில்லையெனவும் அவர் கூறியுள்ளார்.