Breaking News

மின்சார உற்பத்தி நிலையங்களுக்கு இராணுவ பாதுகாப்பு - ஜனாதிபதி உத்தரவு

தேசிய மின்சார விநியோகத்திற்கு உதவும், நாட்டின் சகல மின்சார உற்பத்தி நிலையங்களுக்கும் இராணுவ பாதுகாப்பு வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

நேற்றைய மின்சார தடைக்கு சில நாசகார வேலைகளும் காரணமாக இருக்கலாமென்ற ஊகங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். எவ்வாறெனினும், உண்மையான காரணத்தை கண்டறிவதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

புதிய அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற பின்னர், நாடளாவிய ரீதியில் மின்தடை ஏற்பட்ட மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

சீன அரசாங்கத்தின் நிதியுதவியில் இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள அனல் மின் நிலையம் தொடர்பில், மின்சக்தி அமைச்சு எதிர்காலத்தில் செயற்படும் விதம் குறித்த முக்கிய கலந்துரையாடலொன்று, நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.