மீண்டும் மின்சார தடை
நுரைச்சோலை அனல்மின் நிலைய நடவடிக்கைகள் முற்றாக செயலிழந்துள்ளதால், கொழும்பை தவிர ஏனைய பிரதேசங்களில் தொடர்ந்தும் மின் விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அத்துடன், மின்தடை குறித்து மின்சக்தி மற்றும் புதுப்பிக்கப்பட்ட எரிசக்தி அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டியவுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட கலந்துரையாடலொன்றை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த கலந்துரையாடலுக்கு முன்னதாக துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர் பிறிதொரு கலந்துரையாடலை தற்போது நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பியகம துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை), நாடளாவிய ரீதியில் சுமார் ஆறு மணித்தியாலங்கள் மின்தடை ஏற்பட்டது. குறித்த மின்தடைக்கான காரணம் தொடர்பில் பல கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








